
புது டெல்லி, ஏப்ரல் 27 கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், சூழ்நிலையைக் கையாள்வது பற்றியும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். முடக்கநிலை […]
Continue reading …
வேலூர்,ஏப்ரல் 27கென்னடி வேலூரில், போலீசார் நடத்திய சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்திவந்த 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆணையின்படி, வேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்திரவின்பேரில், பாகாயம் காவல் வட்ட ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார் பார்ட்டி ஆகியோர் சேர்ந்து, முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.வேலூரின், சகிதம் அரியூர் […]
Continue reading …
புது டெல்லி, ஏப்ரல் 26 எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் பொது ஊரடங்குக் காலத்தில் இந்த மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மனதின் குரலின் பொருட்டு வந்த ஆலோசனைகள், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது, எப்போதும் வருவதை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றது. ஏகப்பட்ட விஷயங்களை தனக்குள் தாங்கிக் கொண்டு, உங்களது இந்த மனதின் குரல் என் வரையில் வந்திருக்கின்றது. இவற்றை எத்தனை அதிகம் முடியுமோ அத்தனை அதிகம் படிக்க […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 26 தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளைபொருட்களைபாதுகாத்துசேமித்திட கிடங்குவசதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு […]
Continue reading …
நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி ஐந்து மாற்றுத் திறனாளி குடும்ப நபர்களுடன் வசித்து வரும் திருமணஞ்சேரி கோவிலின் ஊழியருக்கு, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, நிவாரண உதவிகளை செய்துள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி என்ற கிராமத்தில், புகழ்பெற்ற கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருமணம் தடை உள்ளவர்கள், இக்கோவிலுக்கு சென்று வந்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் பணிபுரியும் முரளி என்பவரின் குடும்பத்தினர் ஐந்து பேரும் மாற்றுத் திறனாளிகள். கொரோனா வைரஸ் காரணமாக […]
Continue reading …
நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி நாகப்பட்டினத்தில் டி.எஸ்.பி.அலுவலகத்தின் பக்கத்தில் காவல்கள் அங்காடி உள்ளது. அதன் அருகில் காவலர்கள் குடியிருப்புகள் இருப்பதால் காவலர்கள் பணியில் இருக்கும் போது குடும்பத்தினர் அங்காடியில் மளிகை பொருள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருந்தது. இதில் சிறை காவலர்கள், வன விலங்குதுறை, தீயணைப்பு துறை, காவல் துறை போன்றவர்கள் பயன் பெற்று வந்தனர். ஆயுதப்படையின் டி.எஸ்.பி யின் மேற்பார்வையில் இயங்கி வந்த அங்காடி, கடந்த ஒரு மாத காலமாக […]
Continue reading …
Continue reading …

புது டெல்லி, ஏப்ரல், 24 பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23/04/2020) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். இரண்டு தலைவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பெருந்தொற்றுக்கு எதிராக தங்களது நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அத்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை எதிர்கொண்டு அதனைச் சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களை இருவரும் […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 24 கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆவின் பாலகங்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் […]
Continue reading …
நாகை ஏப்ரல் 24 பி.மூர்த்தி (எ) சிற்பி நாகை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவப்பிரகாசம் என்பவர், லஞ்சம் பெற்ற புகார் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவப்பிரகாசம். ஜெயங்கொண்டாம் ஊரை சேர்ந்த இவர், கஞ்சா, சாராயம் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இவர், இங்கு காவல் ஆய்வாளராக பணியை தொடங்கிய நாள் முதல், புகார் அளிப்பவர்களிடம் இருந்து, லஞ்சம் பெறாமல் நடவடிக்கை […]
Continue reading …