இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவல் எந்த கட்டத்தை அடையக்கூடாது என்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அந்த சமூகப் பரவல் கட்டத்தை நாட்டின் சில பகுதிகள் எட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் இயக்குனரும், மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா இது குறித்து தெரிவித்திருக்கும் […]
Continue reading …புதுடெல்லி : கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் வகையிலான மூடநம்பிக்கைகளையும், வதந்திகளையும் அனுமதிகக் கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் ஒரு மோசமான தொற்று என்றும் , அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, வதந்திகளையும், தவறான தகவல்களையும் கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையின் […]
Continue reading …சென்னை : கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவைப்படும் முக்கிய உணவுப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற வேளாண் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 1. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை […]
Continue reading …வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் அக்ரஹாரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெரு என்ற முகவரியில் யோகானந்தம் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இரவு 7.30 மணி அளவில் மேற்படி முகவரிக்கு சென்று சோதனை செய்ததில் Dr.விஜயகோவிந்தராஜன், MBBS.,DLO என்பவரின் பெயரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிளினிக் இயங்கி வருகிறது. மேற்படி கிளினிக்கில் யோகானந்தம் என்பவர் வயதான பாட்டி ஒருவருக்கு ஊசி போட்டு, மாத்திரை வழங்கி மருத்துவம் பார்த்து வந்தார். மேலும் மேற்படி கிளினிக்கில் […]
Continue reading …கென்னடி திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலை கிராம பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராணி, விஜயமுத்துக்குமார் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 8 ஊறல்களில் கள்ளசாராயம் பதப்படுத்தியது தெரியவந்தது பின்னர் போலீசார் அதனை கீழே ஊற்றி […]
Continue reading …சென்னை : தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை திருக்கோயில்களில் பணியாற்றும் 3500 திருக்கோயில் பணியாளர்கள். தங்களது ஒரு நாள் ஊதியம் ரூபாய். 52,50,000/- கொரோனா சிகிச்சைக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள், நோய் தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை வழங்கும் வகையில், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர் என்று இந்து சமய அறநிலையத் துறை […]
Continue reading …வே. மாரீஸ்வரன் கோவை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, இரண்டாம் இடத்தில் உள்ளது கோவை மாவட்டம். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் இரவு பகல் பாராமல் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளையும் நோய் தொற்று உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்றைத் தடுத்து கொண்டு வருகின்றனர். வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்நேரத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. […]
Continue reading …சென்னை : சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடையே, சிரமமான சூழ்நிலைகளில், பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கியுள்ளீர்கள். இதற்காக, உங்கள் முயற்சிகளை, நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கேமரா மேன்களின் தொழில்முறை அமைப்பான மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், பாராட்டுகிறது. உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், அதற்கு பதிலாக மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சில […]
Continue reading …பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு வருடத்திற்கு 30 சதவீதமாக குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்கு நிதியாகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறுகையில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு மற்றும் மாநில ஆளுநர்களும் 30 சதவீத ஊதியத்தை […]
Continue reading …புதுடில்லி : கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க, நாட்டு மக்கள் அனைவரும் இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார். கொரோனாவை விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், […]
Continue reading …