Home » Entries posted by admin (Page 33)
Entries posted by admin

அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு சந்தா செலுத்த அவகாசம் நீட்டிப்பு !

Comments Off on அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு சந்தா செலுத்த அவகாசம் நீட்டிப்பு !
அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு சந்தா செலுத்த அவகாசம் நீட்டிப்பு !

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்கள் சந்தா தொகை செலுத்த தபால் நிலையங்களுக்கு செல்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் சில தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிற போதிலும், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த வாடிக்கையாளர்கள் அனைவரின் வசதி கருதி, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையின், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகம், […]

Continue reading …

பிரதமர் மோடி புனித வெள்ளி செய்தி !

Comments Off on பிரதமர் மோடி புனித வெள்ளி செய்தி !
பிரதமர் மோடி புனித வெள்ளி செய்தி !

உண்மை, சேவை மற்றும் நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நாளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். பிறருக்கு சேவை செய்வதில் ஏசு கிறிஸ்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய தைரியமும், அறநெறியும் தனித்துவமானவை. நீதிக்கான அவருடைய நிலைப்பாடும் தனித்தன்மையுடன் தான் இருந்தது. இந்தப் புனித வெள்ளி நாளில் ஏசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதியில் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என்று பாரத பிரதமர் […]

Continue reading …

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !

Comments Off on குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !

மும்பை : கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் மும்பையில் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக, அடிப்படை உணவுப் பொருட்களைக் கொண்ட ரேஷன் பைகளை இந்திய கடற்படை நிர்வாகம் மாநில அரசிடம் ஒப்படைத்தது. மும்பையில் தவித்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஏப்ரல் 4 மற்றும் 8 ஆம் தேதிகளில் இவை வழங்கப்பட்டன. முடக்கநிலை காலத்தில் தவித்து வரும் குடிபெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று மும்பை மாநகர […]

Continue reading …

கல்வி வள்ளல் செங்கல்வராய நாயகர் அவர்களின் 192வது பிறந்த தினம் இன்று !

Comments Off on கல்வி வள்ளல் செங்கல்வராய நாயகர் அவர்களின் 192வது பிறந்த தினம் இன்று !

கல்வி வள்ளல் செங்கல்வராய நாயகர் 1829 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை பெருமாள் நாயகர், மெட்ராஸ் இராணுவத்தில் (Madras Army) சுபேதார்- மேஜராக இருந்தார். “சர்தார் பகதூர்” என்ற பட்டத்தை அரசாங்கம் அவருக்கு வழங்கி கவுரவித்தது. இவரது தாய் தெய்வயனம்மல். செங்கல்வராய நாயகர் அனைவரிடமும் இனிமையான தன்மையுடன் பழகக்கூடியவர். இவர், கடவுள் மற்றும் பெற்றோர் மீது அதீத பக்தி கொண்டவராக விளங்கினார். அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் கருணை காட்டினார். அவரது தந்தை மரணத்தின்போது, 30  வயதாக […]

Continue reading …

உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

Comments Off on உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உகாண்டா அதிபர் யோவேரி காகுட்டா முசேவேனியுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த் தொற்றை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சுகாதாரத் துறை சவால்கள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். இப்போதைய சுகாதார நெருக்கடி நேரத்தில் தனது ஆப்பிரிக்க நண்பர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்று உகாண்டா அதிபர் முசேவேனியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். உகாண்டாவில் இந்த நோய் பரவாமல் தடுப்பதில், அந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு […]

Continue reading …

நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

Comments Off on நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !
நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம்,  பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் மாற்று திறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.

Continue reading …

கொரோனா குறித்த சுய தகவல் பதிவு – முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார் !

Comments Off on கொரோனா குறித்த சுய தகவல் பதிவு – முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார் !
கொரோனா குறித்த சுய தகவல் பதிவு – முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார் !

சென்னை  : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை- IIT மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்கள். இந்த குரல்வழிச் சேவையானது, மொத்தஅலைபேசி பயனாளிகளில் நவீன கைபேசியை (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தாத 60 […]

Continue reading …

மோடிக்கு நன்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Comments Off on மோடிக்கு நன்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப்
மோடிக்கு நன்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகையே அசுருத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தோற்றுக்கு அமெரிக்காவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட நாங்கள் ஆர்டர் செய்த சில மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் […]

Continue reading …

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 738 !

Comments Off on தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 738 !
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 738 !

சென்னை : கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துவரும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார்,  அவர் கூறியதாவது : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு, இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48, இதில் 42 நபர்களின் தொற்று புதுடெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும் அரசு கண்காணிப்பில் 230 பேரும் […]

Continue reading …

முன்னின்று சுகாதாரப் பணி செய்யும் அமைச்சர் !

Comments Off on முன்னின்று சுகாதாரப் பணி செய்யும் அமைச்சர் !
முன்னின்று சுகாதாரப்  பணி செய்யும் அமைச்சர்  !

சென்னை  : உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிமானவர்கள் பாதிக்கப்பட்டு 70000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகையே உலுக்கும் கொரோனா கிருமியை ஒழிக்கப் பாடுபடுவது அனைவரின் கடமை. அந்த வகையில் தானே முன்னின்று மக்களின் சுகாதாரத்தைக் காக்க, நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்காக தமிழக அமைச்சர் திரு.D.ஜெயகுமார் இரவு பகல் பாராமல் பணி செய்து வருகின்றார். தமிழக அரசு மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்து வருகின்றது. தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் […]

Continue reading …