மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என்றும் உத்தர விட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி மதுரை காம ராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இவரது நிய மனத்தை எதிர்த்து பேராசிரியர் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கல்யாணி நியமனத்துக்கு தடை விதித்தது. […]
Continue reading …நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா 2 நாள் விவாதத் துக்கு பிறகு மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தன. மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. மொத்தம் 9 திருத்தங்களை மக்களவை ஏற்றுக்கொண்டது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் ஆகியவை மவுனம் காத்து வந்தன. இந்நிலையில், அரசின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு […]
Continue reading …நாகரீகம் வளர, வளர, அறிவு முதிர்ச்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வக்ரபுத்திதான் அதிகம் தற்போதைய மக்களுக்கு உண்டாகி இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலில் பா.ஜ.க. தமிழக தலைவர் முன்னாள் இலங்கை அதிபருக்கு இந்திய குறிப்பாக தமிழக படகுகளை பிடித்துவைக்க ஆலோசனை கூறி தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார்கள். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், காஷ்மீர் தேர்தலுக்கு பாகிஸ்தானுக்கும் பாக் தீவிரவாதிகளுக்கும் நன்றி கூறியுள்ளாராம். காரணம் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மறுபடியும் தீவிரவாதிகள் கடத்தி சென்றால், நரேந்திரமோடி […]
Continue reading …‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிம்புவை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்துக்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சிம்பு, பல்லவி சுபாஷ், விடிவி கணேஷ் நடிப்பில் ‘சட்டென்று மாறுது’ என்ற தலைப்பில் படம் உருவாகி வந்தது. அந்த நிலையில், அஜித்தின் கால்ஷீட் கிடைத்ததும், ‘என்னை அறிந்தால்’ படம் உருவானது. பிப்ரவரி 5-ல் வெளியான இப்படம் […]
Continue reading …கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்து சில படங்களை தயாரித்தவர். பண விஷயத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கருணாநிதிக்கு டாட்டா காட்டியவர் ஏ.எல்.அழகப்பன். இவருக்கு முதல் மகன் இயக்குநர் ஏ.எல்.விஜய், இரண்டாவது மகன் உதய். ஏ.எல்.விஜய் நடிகை அமலாபாலைத் திருமணம் செய்தார். நடிகர் உதய், ஜெயா டி.வி. தொகுப்பாலினியை காதலித்து மணந்தார்.சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி தாணுவிடம் மோதி மூக்குடைப்பட்டார் அழகப்பன். தலைவரான பின்னும் கலைப்புலி தாணுவுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் விரோதமாக செயல்படும் தந்தையை இயக்குநர் விஜய்க்குப் […]
Continue reading …வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘சலுகை’ அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும். அதற்கான விளக்கம் இதோ: இந்த பட்ஜெட்டில் பிரிவு ’80 டி’ மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த […]
Continue reading …பெர்த்தில் நடைபெற்ற யு.ஏ.இ. அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.யு.ஏ.இ. டாஸ் வென்று முதலில் பேட் செய்து அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்துவீச்சிற்கு 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.ரோஹித் […]
Continue reading …சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் குறைவாக உள்ளது என்றும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் தெரிவித்ததாவது: பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் இறப்பு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோயாளிகள் வேறு நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் இறப்புக்கான பிரதான காரணம் ஆய்வு செய்யப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும். இந்தியாவில் […]
Continue reading …நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 152 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே […]
Continue reading …புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு: * அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. * சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. * அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும். * இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். * தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 50 லட்சம் கழிப்பறைகள் […]
Continue reading …