Home » Entries posted by admin (Page 43)
Entries posted by admin

ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல்!

Comments Off on ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல்!

பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை பைலட் வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், […]

Continue reading …

சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி !

Comments Off on சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி !

‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிம்பு. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் ‘வணக்கம் சென்னை’. அனிருத் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி அடுத்து என்ன படம் இயக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கிருத்திகா உதயநிதி படத்தை […]

Continue reading …

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’!

Comments Off on 62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’!
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’!

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் – மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய ‘குற்றம் கடிதல்’ எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். ‘சைவம்’ படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ‘ஜிகர்தண்டா’ எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. […]

Continue reading …

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் !

Comments Off on தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் !

தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த பிப்ரவரி 17-ம் […]

Continue reading …

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் !

Comments Off on சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் […]

Continue reading …

நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !

Comments Off on நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !

 நாடு முழுவதும் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து புலிகள் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதிகளில் இருந்து புலிகள் எண்ணிக்கை குறைந்த மற்றும் புலிகள் இல்லாத (வாழ்ந்து அழிந்த) பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றின் வாழிட பரப்பு குறைந்த சூழலில் ‘புலிகள் – மனிதன் மோதல்’ மற்றும் புலிகள் வேட்டை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்தத் திட்டம் தீர்வாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு !

Comments Off on புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு !

கொழும்பு: புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேஷ அறிக்கையொன்றை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முற்படுவதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி அந்த அமைப்புகள் மீது முந்தைய […]

Continue reading …

முடிந்தது ‘லிங்கா’ பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

Comments Off on முடிந்தது ‘லிங்கா’ பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தையொட்டி, விநியோகஸ்தர்கள் கிளப்பிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் மாதம் வெளியான ‘லிங்கா’. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு பல விநியோகஸ்தர்கள் பெருமளவில் நஷ்டம் அடைந்ததாக பிரச்சினை கிளம்பியது. இதைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில், உண்ணாவிரதப் போராட்டம், பத்திரிக்கையாளர் சந்திப்பு என பிரச்சினை நீள, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் லிங்கா குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் […]

Continue reading …

நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி !

Comments Off on நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி !

இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி  100வது வெற்றியை இன்று ருசித்தது ! உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை வீழ்த்தியது. இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 போட்டிகளில் இந்திய அணி  வெற்றி பெற்றுள்ளது. 69 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. மெல்பர்னில் இன்று தோனி தலைமையில் இந்திய அணி கண்டது 100வது வெற்றி ஆகும். இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் […]

Continue reading …

அரையிறுதியில் நுழைந்தது இந்தியா… பச்சை சட்டை கிழிந்தது !

Comments Off on அரையிறுதியில் நுழைந்தது இந்தியா… பச்சை சட்டை கிழிந்தது !

உலகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ரோகித் சர்மாவும், ஷிகர் […]

Continue reading …