கர்நாடகம் ஓசூர் அருகே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்போவதாக முதலில் எச்சரித்தது நமது நெற்றிக்கண் இதழ்தான். அப்போது கண்டுகொள்ளாத தமிழக எதிர்க்கட்சிகள், மற்ற ஊடகங்கள் வெளியிட்ட பின்பு கொதித்து எழுகின்ற நிலையைக் கண்டு தமிழக மக்கள் நகைக்கிறார்கள். பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை கர்நாடகம் எடுக்கும் எந்த ஒரு தமிழக விரோத திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பை தெரிவிக்காது என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது. காரணம் அங்கு நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை மற்ற எதிர்கட்சிகளுக்கு தமிழகத்தில் கொதித்து […]
Continue reading …தான்சானியா நாட்டு தம்பதியருக்கு ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகள், சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தான்சானியா நாட்டில் உள்ள தார் எஸ் சலாம் நகரை சேர்ந்தவர் ஜிம்மி இம்டெமி. இவரது மனைவி கரோலின் சக்கரியா. இவர்களுக்கு எட்டரை மாதங்களுக்கு முன்பு உடல் ஒட்டியபடி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுக்கு அப்ரியானா, அட்ரியானா என பெயர் வைத்து பெற்றோர் அழைத்து வந்தனர். இந்நிலையில் ஒட்டியுள்ள குழந்தைகளை பிரிப்பதற்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]
Continue reading …புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.ஆனால், ரூ.600 கோடி வரையிலான அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டுமே நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும், […]
Continue reading …6 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். 7 மணி நேரம் குண்டுச் சத்தம். பள்ளி முன் பெற்றோர் கதறல். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் ராணுவம் நடத்தி […]
Continue reading …அகில இந்திய காங்கிரசில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறதாம். பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி கொடுக்க சோனியா சம்மதித்து விட்டாராம். இதனால் வடக்கு, வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க, வலிமையான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. காங்கிரஸ் மாநில முதல்வர்களின் மாற்றம் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பாராளுமன்றத் தோல்விக்குப் பிறகு காங்கிரசை குறைகூறிய சுயநல காங்கிரஸ்வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப்படும் என்ற கருத்து உலவுகிறது. தமிழக சிதம்பரம் தேவையற்ற நிலையில் […]
Continue reading …கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அகில இந்திய காங்கிரசை குறிப்பிடுகிறார்கள். சொந்த செல்வாக்கை நந்தவனத்து ஆண்டிபோல் போட்டு உடைத்து வரவிருக்கும் ஆதரவையும் மொத்தமாக உடைத்தவராக ராகுல் காந்தியை குறிப்பிடுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டிலும், நிர்வாகத் திறமையின்மையிலும் சிக்கி காங்கிரசை அழிக்கிறார்கள். சிறந்த நிர்வாகத்திறமை, அரசியல் நிர்வாகம் தெரிந்தவர்கள், முதல்வராக சோனியாகாந்தியின் அடிவருடிகள் தடுத்து விடுகிறார்களாம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி மறுபடி புத்துணர்ச்சி பெறுவது கடினம் என்ற கசப்பான உண்மை வெளியாகி […]
Continue reading …இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வலதுகையான அமித்ஷாவுடன் இணைந்து புத்திசாலித்தனமாக, அரசியல் காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. மராட்டியத்தில் ஆணவத்துடன் அரசியல் நாடகம் ஆடிய சிவசேனாவை, அதன் குகையிலேயே கட்டிப்போட்ட துணிச்சலைப் பார்த்து மராட்டிய மக்கள் வியக்கிறார்கள். அத்வானியின் ஆதரவை பெற்ற சிவசேனா, மோடியை தங்கள் கீழ் ஆட்ட நினைத்ததின் விளைவு தற்போது ஆடிப்போயுள்ளார்களாம். மராட்டிய அரசியலில் சரத்பவார் அடித்த சிக்ஸர், மராட்டிய மக்களை அதிரச் செய்துவிட்டது. சிவசேனாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்கள். […]
Continue reading …பிரதமர் நரேந்திரமோடி கண்ணுக்கு தெரியாத இந்திய எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறி உள்ளாராம். உண்மையில் பல கட்சிகளிலுள்ள இந்திய அறிவாளிகள், பல நாடுகளுடன் ரகசிய தொடர்பு உடையவர்களாக கூறப்படுகிறார்களாம். பல நிகழ்வுகளில் இந்திய அறிவாளிகளின் தலையீட்டின்பேரில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். சீனாவை எதிர்த்தால் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு கோபத்தை கிளறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். பாகிஸ்தான் மீது கை வைத்தால் இந்திய மத சார்பற்ற கட்சிகளின் கடும் கோபத்தை சந்திக்கவேண்டி வரும் என்று […]
Continue reading …திருவரங்கம் தொகுதி ராசியில்லாதது என்ற புதிய கண்டுபிடிப்பை ஊடகங்கள் மூலம் தெரிவித்து தங்கள் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார்களாம். அருள்மிகு ரங்கநாதபெருமாள் தினமும் உலவுகின்ற திருத்தலம். பூலோக வைகுண்டம் என்ற பெயர் பெற்றது. அ.தி.மு.க. தலைவியை புகழின் உச்சியில் கொண்டு சென்ற புண்ணியத்தொகுதி. உண்மையில் ரங்கநாதபெருமாளை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தவர்களாக அறங்காவலர்களை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டுகிறார்கள். இந்து சமய ஆணையர் திருவரங்கம் கோவிலில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் என்கிறார்கள். இவரது கண் அசைவில் திருவரங்க […]
Continue reading …மேட்டூர் அருகே பாலாறு வனப்பகுதியில் தமிழர் ஒருவரின் சடலம், குண்டுக் காயங்களுடன் கிடந்தது. அவரை கர்நாடக வனத்துறையினர் சித்ரவதை செய்து கொன்றதாக பரவிய தகவலையடுத்து, தமிழக – கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கோவிந்தபாடி, செட்டிப்பட்டி, ஏமனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா (42), செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி, நெட்டகாளன் கொட்டாயை சேர்ந்த முத்து சாமி, சேத்து, லட்சுமணன் ஆகியோர் கர்நாடக […]
Continue reading …