முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளை அரசியல் சதியில் சிக்கிய முக்கிய நிகழ்வாக குறிப்பிடுகிறார்கள்! அ.தி.மு.க. தலைவியின் எழுச்சி கட்சியான உறுதியான பிடிப்பு, தமிழ் குலத்திற்கு துணிந்து எடுக்கும் முடிவுகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை பிரச்னையில் அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், இலங்கை அதிபருக்கு அரசியல் வாழ்வை முறிக்கும் செயலாக தெரிந்ததாம். இதனால் அ.தி.மு.க. தலைவிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டப்பட்டு, அ.தி.மு.க.வின் சுயநல அரசியல்வாதிகளையும் பேராசை கொண்ட அதிகாரிகளையும் […]
Continue reading …தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே போல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக்டோபர் 27-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். நாகர்கோயிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 20-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு 24-ம் தேதி சிறப்பு […]
Continue reading …திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரலாறு பல நூற்றாண்டு களைக் கடந்ததாகும். திருவேங் கடமுடையான் குடிகொண்டுள்ள இத்திருமலை, திருவேங்கடமலை யாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த திருவேங்கட மலை சப்த மலைகள் எனப்படும் ஏழுமலைகள் அடங்கிய திருமலையாக விளங்குகிறது. வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் முதன்முதலில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டி வழிபட்டான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி.மு.1-ம் நூற்றாண்டில் திருமலையில் ஒரு புற்றிலிருந்த ஏழுமலையானின் சுயம்பு சிலையை, வன்னிய சக்கரவர்த்தி தொண்டைமான் முதன்முதலில் தரிசித்துள்ளார். பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த சிலையைச் சுற்றிலும் […]
Continue reading …ஏற்கெனவே நாகை மாவட்ட எஸ்.பி.யாக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பெற்றவர் சிபிசக்ரவர்த்தி ஐ.பி.எஸ். இது பற்றி நமது நெற்றிக்கண் இதழிலும் எழுதியிருந்தோம். தற்போது ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி வந்ததிலிருந்தும் பல அதிரடிகளை செய்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.இங்கு பொறுப்புக்கு வந்தவுடன் முதல் வேலையாக போக்குவரத்தில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த ஈரோடு மாநகரத்தை நெரிசலிலிருந்து மீட்டார். நெரிசலான நேரங்களில் நகருக்குள் […]
Continue reading …மதுரை எலுமலை அருகே 17வயது பள்ளிச் சிறுமி தீக்குளித்து உயர்துறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையைத் தாங்க முடியாமல் நாகலட்சுமி என்ற இந்த பள்ளிச் சிறுமி தீக்குளித்தார். உடல் முழுதும் 80% தீக்காயங்களுடன் இந்தப் பெண் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி திட்டத்தினால் பயனடைந்தவர் நாகலட்சுமி இதனால் இந்தத் தீர்ப்பினால் அவர் மனம் உடைந்ததாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கோபால்சாமி தெரிவித்தார்.வாங்கி நாராயணபுரத்தில் வசித்து வரும் இந்த […]
Continue reading …ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு இவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மல்யுத்தம், 65 கிலோ உடல் எடைப்பிரிவில், அரையிறுதியில் சீனாவின் யீர்லான்பீக் என்பவரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் யோகேஷ்வர் தத். இன்று தோவான் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாஜிகிஸ்தான் வீரர் ஜாலிம்கான் யுசுபோவ் என்ற வீரரை 3-0 என்று அதிரடி வெற்றி பெற்று […]
Continue reading …தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் ஓ.பன்னீர் செல்வம் அடுத்த முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக ஆளுநர் ரோசையாவைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் ரோசையாவிடம் தெரிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓ.பன்னீர் செல்வம் தமிழக […]
Continue reading …நியூயார்க்: ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நியூயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகம் முன் இலங்கை தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரி்க்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும் தமிழர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.ராஜபக்சே பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச […]
Continue reading …டெல்லியில் நேற்றுமுன்தினம் வெள்ளை புலிக்கு பலியான இளைஞர் மனநலம் சரியில்லாத வர் என டெல்லி தேசிய உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மத்திய வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பூங்காவின் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமதுகான் கூறும்போது, ‘புலியின் இடத்தில் குதித்த மக்ஸுத்கான்தான் சம்பவத் துக்கு காரணம். அவர் கடந்த 4 வருடங்களாக மனநிலை சரியில் லாதவராக இருந்திருக்கிறார். சம்பவத்தன்று அன்று அவர் போதைமருந்து சாப்பிட்டு இருந் ததாகவும் அவருடன் […]
Continue reading …செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் மார்ஸ் […]
Continue reading …