
இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தொல்வி முகம் கண்டுள்ளார். சற்று முன் வரை சிறிசேனா 30,33,122 (52.68%) வாக்குகள் பெற்று முன்னிலை. ராஜபக்ச 26,50,049 (46.02) வாக்குகள் பெற்று பின்னடைவு.இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி நிலவரப்படி, தேச அளவில் சிறிசேனா 14,06,557 (52.49%) வாக்குகளுடன் முன்னிலையிலும், ராஜபக்ச 12,38,340 (46.21%) வாக்குகளுடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, […]
Continue reading …
ஏழாண்டுகள் காதலித்து மணந்த பின்னணி பாடகி சைந்தவியுடன் வாழ்க்கை கசந்ததா என்ன? இசையமைக்கும் பல வாய்ப்புகளை உதறிவிட்டு, நடிகைகள் பின்னால் சுற்றத்தொடங்கிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். முதல் படம் பென்சில் இன்னமும் வெளியாகவில்லை. அடுத்து நடித்த பேய்ப்படமும் திரைக்கு வரத்திணறுகிறது. ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு திரிஷா, இலியானா, நயன்தாரா பின்னால் வழிந்தபடி சுற்றுகிறார். கேரவனில் போய் பேச்சு நடத்துகிறார். ஓட்டலில் ரூம் போட்டு மேற்படி நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கும்படி கெஞ்சுகிறார். ஆனால் பெரிய நடிகைகள் யாரும் […]
Continue reading …
நீண்ட நெடுங்காலமாகவே பாதி முகத்தை மூடிய தாடி மீசையுடன் படங்களில் நடித்துவந்த விஜய்சேதுபதி, இப்போது தாடி மீசையை முற்றிலுமாக மழித்து பளபளவென்று காட்சி தருகிறார். ஏன் எதற்காக? நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நயனுக்கு ஜோடியாக நடிக்கும்போது தாடி மீசையுடனிருந்தால் எடுபடாது. நயன்தாராவும் விரும்பாததன் காரணமாக தாடி மீசைக்கு டாட்டா காட்டிவிட்டார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை பார்க்க வந்தவர்களுக்கு விஜய் சேதுபதியை அடையாளம் தெரியவில்லை. இதுதான் கொடுமை.
Continue reading …
கர்நாடகம் ஓசூர் அருகே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்போவதாக முதலில் எச்சரித்தது நமது நெற்றிக்கண் இதழ்தான். அப்போது கண்டுகொள்ளாத தமிழக எதிர்க்கட்சிகள், மற்ற ஊடகங்கள் வெளியிட்ட பின்பு கொதித்து எழுகின்ற நிலையைக் கண்டு தமிழக மக்கள் நகைக்கிறார்கள். பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை கர்நாடகம் எடுக்கும் எந்த ஒரு தமிழக விரோத திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பை தெரிவிக்காது என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது. காரணம் அங்கு நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை மற்ற எதிர்கட்சிகளுக்கு தமிழகத்தில் கொதித்து […]
Continue reading …
தான்சானியா நாட்டு தம்பதியருக்கு ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகள், சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தான்சானியா நாட்டில் உள்ள தார் எஸ் சலாம் நகரை சேர்ந்தவர் ஜிம்மி இம்டெமி. இவரது மனைவி கரோலின் சக்கரியா. இவர்களுக்கு எட்டரை மாதங்களுக்கு முன்பு உடல் ஒட்டியபடி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுக்கு அப்ரியானா, அட்ரியானா என பெயர் வைத்து பெற்றோர் அழைத்து வந்தனர். இந்நிலையில் ஒட்டியுள்ள குழந்தைகளை பிரிப்பதற்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]
Continue reading …
புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.ஆனால், ரூ.600 கோடி வரையிலான அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டுமே நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும், […]
Continue reading …
6 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். 7 மணி நேரம் குண்டுச் சத்தம். பள்ளி முன் பெற்றோர் கதறல். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் ராணுவம் நடத்தி […]
Continue reading …
அகில இந்திய காங்கிரசில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறதாம். பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி கொடுக்க சோனியா சம்மதித்து விட்டாராம். இதனால் வடக்கு, வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க, வலிமையான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. காங்கிரஸ் மாநில முதல்வர்களின் மாற்றம் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பாராளுமன்றத் தோல்விக்குப் பிறகு காங்கிரசை குறைகூறிய சுயநல காங்கிரஸ்வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப்படும் என்ற கருத்து உலவுகிறது. தமிழக சிதம்பரம் தேவையற்ற நிலையில் […]
Continue reading …
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அகில இந்திய காங்கிரசை குறிப்பிடுகிறார்கள். சொந்த செல்வாக்கை நந்தவனத்து ஆண்டிபோல் போட்டு உடைத்து வரவிருக்கும் ஆதரவையும் மொத்தமாக உடைத்தவராக ராகுல் காந்தியை குறிப்பிடுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டிலும், நிர்வாகத் திறமையின்மையிலும் சிக்கி காங்கிரசை அழிக்கிறார்கள். சிறந்த நிர்வாகத்திறமை, அரசியல் நிர்வாகம் தெரிந்தவர்கள், முதல்வராக சோனியாகாந்தியின் அடிவருடிகள் தடுத்து விடுகிறார்களாம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி மறுபடி புத்துணர்ச்சி பெறுவது கடினம் என்ற கசப்பான உண்மை வெளியாகி […]
Continue reading …
இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வலதுகையான அமித்ஷாவுடன் இணைந்து புத்திசாலித்தனமாக, அரசியல் காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. மராட்டியத்தில் ஆணவத்துடன் அரசியல் நாடகம் ஆடிய சிவசேனாவை, அதன் குகையிலேயே கட்டிப்போட்ட துணிச்சலைப் பார்த்து மராட்டிய மக்கள் வியக்கிறார்கள். அத்வானியின் ஆதரவை பெற்ற சிவசேனா, மோடியை தங்கள் கீழ் ஆட்ட நினைத்ததின் விளைவு தற்போது ஆடிப்போயுள்ளார்களாம். மராட்டிய அரசியலில் சரத்பவார் அடித்த சிக்ஸர், மராட்டிய மக்களை அதிரச் செய்துவிட்டது. சிவசேனாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்கள். […]
Continue reading …