Home » Entries posted by Shankar U (Page 250)
Entries posted by Shankar

மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு!

Comments Off on மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு!

மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளார். இவரது பேச்சால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இடைத்தேர்தல் நடந்தது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதால் மீண்டும் இடைத்தேர்தல் வருமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மனம் வருந்தி இன்று பேசினார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் […]

Continue reading …

பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Comments Off on பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தலையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மணிப்பூரில் […]

Continue reading …

யூடியூபர்களின் வீடுகளில் ரெய்டு!

Comments Off on யூடியூபர்களின் வீடுகளில் ரெய்டு!

சமூகவலைதளமான யூடியூபில் பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருமான வரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவிலுள்ள பிரபல யூடியூபர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. வருமானவரித்துறையினர் கேரளா முழுதும் பல்வேறு இடங்களில் யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். யூடியூபர்கள் தங்களுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருமானதில் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அதற்கான வருமான வரி செலுத்தவில்லை என்றும் புகார் […]

Continue reading …

2வது தொடரும் ரெய்டு: செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி..!

Comments Off on 2வது தொடரும் ரெய்டு: செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி..!

கடந்த சில வாரங்களுக்கு முன் கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்தனர். நேற்று மீண்டும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். இன்று 2வது நாளாகவும் கரூரில் சோதனை தொடர்ந்து வருவதால் செந்தில் பாலாஜி தரப்பினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதேபோல் பழனி […]

Continue reading …

தனுஷூடன் மீண்டும் இணையும் அமலா பால்!

Comments Off on தனுஷூடன் மீண்டும் இணையும் அமலா பால்!

இயக்குநராக தனுஷ் தன்னை நிரூபித்த திரைப்படம் “பவர் பாண்டி”. அடுத்து தனது 50வது படத்தை தானே இயக்கவ-ள்ளார். இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை முடித்ததும் இந்த படத்தை தனுஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் […]

Continue reading …

ஷாமிலியின் புகைப்பட கண்காட்சி!

Comments Off on ஷாமிலியின் புகைப்பட கண்காட்சி!

நடிகர் அஜீத்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி “வீர சிவாஜி” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் “அஞ்சலி” உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் “வீரசிவாஜி” படத்துக்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. போட்டோகிராபியில் ஆர்வமாக இருந்தார். இப்போது அவர் தன்னுடைய புகைப்படங்களை எல்லாம் சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார். அதில் ஷாலினி அஜீத் தன்னுடைய குழந்தைகளோடு கலந்துகொண்டார். மேலும் மணிரத்னம், சுஹாசினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் […]

Continue reading …

2024ம் ஆண்டு முதல் மின்கட்டண மாற்றமா!

Comments Off on 2024ம் ஆண்டு முதல் மின்கட்டண மாற்றமா!

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மின் கட்டணம் முறையில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மத்திய அரசு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதன்படி மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் […]

Continue reading …

லியோ படத்தில் அர்ஜுனா?

Comments Off on லியோ படத்தில் அர்ஜுனா?

விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் விஜய்யின் நண்பர் வேடம் என்றும் வில்லன் சஞ்சய் தத்துக்கு தம்பியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டியோவில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்‌ஷன் காட்சிகளை சமீபத்தில் லோகேஷ் படமாக்கினார். இப்போது “லியோ” திரைபடத்தில் அர்ஜுனின் கெட்டப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீளமான தலைமுடி மற்றும் தாடியோடு இருக்கும் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக, இதுதான் […]

Continue reading …

செய்தியாளர்கள் சந்திக்காததற்கு விளக்கமளித்த முதலமைச்சர்!

Comments Off on செய்தியாளர்கள் சந்திக்காததற்கு விளக்கமளித்த முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இது குறித்து விளக்கமளித்தபோது அவர், “விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர்களை சந்திக்கவில்லை” ஆனால் தமிழக முதலமைச்சர் தனி விமானத்தில் தான் பீகாரருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் விளக்கத்தில் “செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்துடனும் நான் வெளியேறவில்லை, நன்றி கூறும் வரை கூட்டத்தில் இருந்தேன், அதன்பின் விமானத்தை பிடிக்க […]

Continue reading …

நடிகை தேவயானி கட்டிய பண்ணை வீடு!

Comments Off on நடிகை தேவயானி கட்டிய பண்ணை வீடு!

90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் பவ்யமான ஹோம்லி நடிகையாக நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல், நிகழ்ச்சி போன்ற வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தேவயானி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் […]

Continue reading …