Home » Entries posted by Shankar U (Page 248)
Entries posted by Shankar

உதயநிதி படத்துக்கு தடை விதிக்க முடியாது!

Comments Off on உதயநிதி படத்துக்கு தடை விதிக்க முடியாது!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை “மாமன்னன்” திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது, திரைப்படம் மக்கள் பார்க்கவே, இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள், எனவே சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் அதை பார்த்து கொள்வார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பேச்சுரிமை, கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது என கூறி அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். […]

Continue reading …

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையா?

Comments Off on ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையா?

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். கடந்து சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனையாகி வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தக்காளி உள்பட காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்தால் […]

Continue reading …

தோனியின் முதல் தமிழ் படம் ரிலீஸ் எப்போது?

Comments Off on தோனியின் முதல் தமிழ் படம் ரிலீஸ் எப்போது?

புதிதாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் படமாக தமிழ்ப் படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கலகலப்பான காதல் படமாக உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. படத்தின் அறிமுக டீசர் சமீபத்தில் ரிலீசானது. […]

Continue reading …

சினிமாவில் 30 ஆண்டுகளை கொண்டாடும் ரஹ்மான்!

Comments Off on சினிமாவில் 30 ஆண்டுகளை கொண்டாடும் ரஹ்மான்!

“ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். “ரோஜா” திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது. அதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துக்காக பெற்று வந்தார். இப்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து […]

Continue reading …

கதாநாயகனான பிரேம்ஜி!

Comments Off on கதாநாயகனான பிரேம்ஜி!

இயக்குனர் சுரேஷ் சங்கையா 2017ம் ஆண்டு வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர். இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீசாகவில்லை. அதற்கடுத்து அவர் பிரேம்ஜி அமரனைக் கதாநாயகனாக வைத்து அவர் இயக்கியுள்ள “சத்யசோதனை” படத்தின் டிரெயிலர் சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரையிலரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருந்ததால் கூடுதல் […]

Continue reading …

கார்த்தி – நலன் இணையும் படத்தின் தலைப்பு என்ன?-

Comments Off on கார்த்தி – நலன் இணையும் படத்தின் தலைப்பு என்ன?-

“ஜப்பான்” திரைப்படத்தில் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் “ஜப்பான்” படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீசாகும் என கூப்படுகிறது. இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் […]

Continue reading …

வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்!

Comments Off on வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்!

புதிய மேம்பாலம் ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைப்பதற்கு ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையின் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் பல மேம்பாலங்கள் கட்டும் திட்டங்கள் உள்ளன. அவ்வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீட்டர் நீளத்துக்கு புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் நோட்டு 95 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue reading …

“அறம் 2”க்கு முயற்சியெடுக்கும் நயன்தாரா!

Comments Off on “அறம் 2”க்கு முயற்சியெடுக்கும் நயன்தாரா!

கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த முதல் படமான “அறம்” விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உடனடியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது எனப் படக்குழு அறிவித்தது. ஆனால் நயன்தாரா ஒத்துக்கொண்டு இருந்த சிலப் படங்களால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை உருவானது. அதனால் அதற்கிடையே கோபி நயினார் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதியப்படம் ஒன்றை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் முழுதாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்க, இப்போது […]

Continue reading …

சூர்யா படத்தின் வசனத்தை நீக்க சொன்ன உதயநிதி!

Comments Off on சூர்யா படத்தின் வசனத்தை நீக்க சொன்ன உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், “ஏழாம் அறிவு” திரைப்படத்தில் இடம் பெற்ற இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நடிகர் சூர்யா நீக்க சொன்னதாகவும் அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லாததால் அதை நீக்காமல் விட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, “கடந்த 2011ம் ஆண்டு “ஏழாம் அறிவு” திரைப்படத்தை பார்த்துவிட்டு அதில் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் இருக்கும் வசனத்தை நீக்க சொல்லி நடிகர் சூர்யா என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போது எனக்கு […]

Continue reading …

தயாரிப்பு நிறுவனத்தால் அதிருப்தியடைந்த தியேட்டர் அதிபர்கள்!

Comments Off on தயாரிப்பு நிறுவனத்தால் அதிருப்தியடைந்த தியேட்டர் அதிபர்கள்!

உதயநிதி மற்றும் வடிவேலு நடித்துள்ள “மாமன்னன்” திரைப்படத்தை வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பு நிறுவனத்தினால் அதிருப்தியடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “மாமன்னன்” திரைப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் ஜூன் மாதம் 29ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை […]

Continue reading …