
திடீரென்று ஸ்பெயின் நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்கு வீசிய காற்று மற்றும் வறண்ட தட்பவெப்பத்தால், தீ காட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. இதனால், அந்த வனப்பகுதிகளைச் சுற்றிலும் இருந்த கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்தும் […]
Continue reading …
அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான வெயிலும் இருக்கும், மழையும் பெய்யும் என்று வானிலைமையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் மே 26ம் தேதி வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மீதமான மழை முதல் கன மழை வரை பெய்யக்கூடும். மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, […]
Continue reading …
“மாமன்னன்” திரைப்படத்தின் முதல் சிங்கில் பாடல் ஏ.ஆ.ரஹ்மான் இசையில், நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இப்பாடலை நடிகர் சூரி பாராட்டியுள்ளார். “கர்ணன்” படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுதும் நிறைவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் […]
Continue reading …
ஆவின் நிறுவனம் தினமும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த டெண்டர் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்வளத்துறை அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆவின் நிறுவனத்தின் மூலம் மினரல் வாட்டர் பாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். பெட் பாட்டில்கள் மூலம் ஒரு லிட்டர், அரை லிட்டர் வகைகளில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் […]
Continue reading …
நாளை முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற இருந்தது. ஆனால் இந்த கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியருக்கான இடம் ஆறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த பொது பணியிட மாறுதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி […]
Continue reading …
கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சிலர் மரணமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகம் மாவட்டத்தின் புதிய டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Continue reading …
இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட்டு வரும் மிக் 21 ரக போர் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையில் பல்வேறு ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரபலமான ஒன்று மிக் 21 ரக போர் விமானங்கள். சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மிக்21 ரக போர் விமானங்கள் கடந்த 1960ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த சில காலமாக இந்த மிக் 21 […]
Continue reading …
ஐஸ்வர்யா ராஜேஷ் “புஷ்பா” திரைப்படம் குறித்து சர்ச்சையான கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா பதிலளித்துள்ளார். அல்லு அர்ஜூன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா.” படத்தில் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் மூலம் அவர் பல மொழிகளிலும் பிரபலமானார். சமீபத்தில் புஷ்பா படம் பற்றியும், ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் குறித்தும் ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் “சமீபத்தில் ஒரு பேட்டியில் […]
Continue reading …
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் நிஹல்கொயாட் பகுதியை சேர்ந்த 23 வயதான ரொக்ஸ்னா ருயிஸ் என்பவர் அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரொக்ஸ்னாவுக்கு பழக்கமாகியுள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தனது வீட்டிற்கு செல்ல […]
Continue reading …
கவர்னர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த […]
Continue reading …