
சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள […]
Continue reading …
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் “லியோ” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை முடித்ததும், அடுத்தப்படத்திற்கான ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்து போட்டுவிட்டாராம். வெங்கட் பிரபு, விஜய்யின் அடுத்த படமான “தளபதி 68” படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான […]
Continue reading …
கேரளாவில் சமீபத்தில் பெண் டாக்டர் நோயாளி போல் வந்தவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. எர்ணாகுளத்தில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரளா மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிகாரிகள், போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இவர் இன்று மானாமதுரையில் செய்தியாளர்களிடம், “போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தெரியாமல் இருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்ற 1500 பேரை எப்படி கைது செய்திருக்க முடியும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வாங்குவது தவறில்லை. பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது, மற்ற கட்சி […]
Continue reading …
மத்திய அமைச்சர் எல்.முருகன் “கேன்ஸ்’’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டதில், “ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் நடைபெறும். இவ்வாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 27ம் தேதி வரை என மொத்தம் 12 நாட்கள் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழாவில், இந்தியாவின் சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா […]
Continue reading …
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும், சமூக நல ஆர்வலரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் வேட்டை தொடங்கிய நிலையில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது கள்ளச்சாராய உயிர் இழப்பு குறித்து எந்த நடிகரும் […]
Continue reading …
கக்கன் அவர்களின் 3வது மகன் சத்தியநாதனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். 1957 முதல் 1967 வரை தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர் அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறார். இவரது 3வது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர், தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார். […]
Continue reading …
இயக்குனர் நெல்சன் “கோலமாவு கோகிலா” மற்றும் “டாக்டர்” என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் படத்தின் தோல்வியால் நெல்சனை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார். இப்போது அவர் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
விஜய் சேதுபதி தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்தார். ஆனால், “விடுதலை” வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் உருவாகிய படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்.” இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “பொன்னின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது “இந்தியன் 2”, “லால் சலாம்“, “விடாமுயற்சி” உள்பட ஒரு சில படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. […]
Continue reading …