Home » Entries posted by Shankar U (Page 279)
Entries posted by Shankar

காட்டுயானையின் கதை படமாகிறது!

Comments Off on காட்டுயானையின் கதை படமாகிறது!

கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் கேரள மற்றும் தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் […]

Continue reading …

கள்ளக்குறிச்சி மாணவி குறித்து குற்றப்பத்திரிகையில் தகவல்!

Comments Off on கள்ளக்குறிச்சி மாணவி குறித்து குற்றப்பத்திரிகையில் தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் தற்கொலை தான் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளியை சூறையாடினர். இதனால் பள்ளி சில மாதங்களுக்கு மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் போலீஸ் சிபிசிஐடி போலீஸ் […]

Continue reading …

நமீதா பேட்டி!

Comments Off on நமீதா பேட்டி!

நடிகை நமீதா, “கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவையில் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகை நமீதா, “பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் […]

Continue reading …

மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த அன்புமணி வேண்டுகோள்!

Comments Off on மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த அன்புமணி வேண்டுகோள்!

மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர். காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக […]

Continue reading …

முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஈபிஎஸ்!

Comments Off on முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஈபிஎஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களிடம் “கள்ள சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லி போய் வருவது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பொம்மை முதலமைச்சர் மற்றும் திறமையற்ற முதலமைச்சர் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படிப்பட்ட […]

Continue reading …

“விடாமுயற்சி” கெட்டப்பில் அஜீத்!

Comments Off on “விடாமுயற்சி” கெட்டப்பில் அஜீத்!

நடிகர் அஜீத் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான வேலைகளில் மகிழ் திருமேனி முனைப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என அஜீத்தின் ராசியான எழுத்தான “க்ஷி” லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் […]

Continue reading …

திருவாரூரில் “பர்ஹானா” திரைப்படம் ரத்து!

Comments Off on திருவாரூரில் “பர்ஹானா” திரைப்படம் ரத்து!

“பர்ஹானா” திரைப்படத்தின் காட்சிகள் திருவாரூரில் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளன. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் “பர்ஹானா.” இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. சமீபத்தில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார். “பர்ஹானா” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருவாரூரில் இப்பட காட்சிகள் ரத்து […]

Continue reading …

பீர் ஊற்றினால் ஓடும் பைக்!

Comments Off on பீர் ஊற்றினால் ஓடும் பைக்!

அமெரிக்க இளைஞர் ஒருவர் பெட்ரோல் போடாமல் பீர் ஊற்றினால் ஓடும் பைக்கை கண்டுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மின்னசொட்டா என்ற மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்துக்கு பதிலாக பீர் ஊற்றும் பைக்கை கண்டுபிடித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “பீர் ஊற்றினால் பைக்கின் இயந்திரம் வெப்பம் அடையும், அதில் ஏற்படும் நீராவி மூலம் பைக் இயங்கும். இந்த பைக்கில் உள்ள இயந்திரத்தில் பீரை ஊற்றும்போது 300 […]

Continue reading …

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து!

Comments Off on உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து!

ஸ்காட்லாந்து அரசு உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் இயக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை எனவும், சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் […]

Continue reading …

செல்லூரார் நடிகர் விஜய்க்கு ஆதரவா?

Comments Off on செல்லூரார் நடிகர் விஜய்க்கு ஆதரவா?

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]

Continue reading …