
சிபிஐ மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆளுநர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார். குறிப்பாக நேற்று அவர் திராவிட மாடல் குறித்து பேசிய கருத்துக்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் கருத்துக்கு ஒரு சிலர் பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் பெரும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இது […]
Continue reading …
உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய நாடு கடந்த ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மரணமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்து வருகின்றன இதனால், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் அதிபர் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் அனுப்பியது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. துருக்கி தலைநகர் […]
Continue reading …
அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணிச் சலுகை வழங்குவதாக புதுசை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை […]
Continue reading …
குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மத்திய பிரதேசத்தில் மொரீனா மாவட்டம் லேபா கிராமத்தில் 6 பேர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டம், லேபா கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் மற்றும் தீர் சிங் ஆகிய இரு குடும்பத்தினரிடையே கடந்த 2013ம் ஆண்டு முதல் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இன்று காலையில் தகரராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கஜேந்திர […]
Continue reading …
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இன்று காலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பிற்காக ரஜோரி மாவட்டத்தில், இணைய […]
Continue reading …
இனிமேல் கூகுள் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்ட் தேவையில்லை என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் உள்பட்டவைகளுக்கு பாஸ்வேர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் கூகுள் அக்கவுண்டுகளுக்கு பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிங்கர் பிரிண்ட், பேஸ் அன்லாக், ஸ்கிரீன் லாக் போன்ற வசதிகளைக் கொண்டே கூகுள் அக்கவுண்ட்களை இயக்க முடியும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் பாஸ்வேர்ட், டூ ஸ்டெப் வெரிபிகேஷன் போன்ற முந்தைய வழிகளிலும் கூகுள் […]
Continue reading …
தமிழக ஆளுநர் ரவி, “திராவிட மாடல் ஒன்று இல்லை என்றும் திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது. காலாவதி ஆன கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது ஒரே நாடு ஒரே பாரதம் என்று கொள்கைக்கு எதிரானது” என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். கவர்னரின் இப்பேட்டிக்கு ஏற்கனவே பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து […]
Continue reading …
புதுக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளை கலந்து கொண்டது. வாடிவாசலிலிருந்து வெளியான சில நிமிடங்களிலேயே காளை மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த காளையை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு கொம்பன் என்று அழைக்கப்படும் இந்த காளை புதுக்கோட்டை வடசேரி பட்டி நடந்த […]
Continue reading …
ரஷ்ய அதிபர் மாளிகையின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி வரும் நிலையில் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரஷ்ய ராணுவம் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. […]
Continue reading …
ஆசிரியர் ஒருவர் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரபு ஆசிரியராக பணியாற்றிய சாகுல் அமீது மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கிற்கு இன்று […]
Continue reading …