Home » Entries posted by Shankar U (Page 304)
Entries posted by Shankar

“விடுதலை” படத்தை பாராட்டி ரஜினிகாந்த் டுவீட்!

Comments Off on “விடுதலை” படத்தை பாராட்டி ரஜினிகாந்த் டுவீட்!

வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது “விடுதலை” திரைப்படம். இத்திரைப்படத்திற்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். திரைப்படத்தைப் பார்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தைப் பற்றி டிவிட்டரில் “விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையாராஜா இசையில் […]

Continue reading …

விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

Comments Off on விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட் உத்தரவு!

“புதிய கீதை” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தவர் அமீஷா பட்டேல். இவர், இந்தி, தெலுங்கு சினிமாவிலும் நடித்திருக்கிறார். குணால் குமாருடன் இணைந்து அமீஷா பட்டேல் இந்தி படமொன்று தயாரிக்கவுள்ளதாகக் கூறி அஜய்குமார் சிங்கிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றார். இக்கடனை திரும்பக் கொடுக்கவில்லை என்பதால், அஜய்குமார் தான் கொடுத்த கடனை கேட்டுவந்துள்ளார். அப்போது, நடிகை அமீஷா பட்டேல் ரூ.2.5 கோடிக்கான இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, பணமின்றித் திரும்ப வந்தது. இதையடுத்து, […]

Continue reading …

அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

Comments Off on அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

இன்று காலை காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான் இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தேன் என கூறியுள்ளார். காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் என்பதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]

Continue reading …

எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று!

Comments Off on எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று!

எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதும் 1500 என்ற கணக்கில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது ஐயாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற […]

Continue reading …

பிரதமர் மோடி சென்னை வருகை!

Comments Off on பிரதமர் மோடி சென்னை வருகை!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள அவர் “தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்’’- என்று பேசியுள்ளார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அங்கு, ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் […]

Continue reading …

பாராட்டு மழையில் நனையும் கௌதம் கார்த்திக்!

Comments Off on பாராட்டு மழையில் நனையும் கௌதம் கார்த்திக்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரின் முதல் படத்தை பொன்குமார் இயக்கியுள்ளார். வரலாற்று திரைப்படமான இதற்கு ‘1947 ஆகஸ்ட் 16’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். 1940களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசான படம், பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த வாரம் “பத்து தல” திரைப்படம் வெளியானது. இப்போது இத்திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், கௌதம் கார்த்திக் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

Continue reading …

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகை குஷ்பூ திரைப்படங்கள் தயாரிப்பதிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. நடிகை குஷ்பு தனக்கு காய்ச்சல் உடல் வலி சோர்வு ஆகியவை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே காய்ச்சல் அறிகுறி வந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதனை சாதாரணமாக […]

Continue reading …

மருந்துகள் கையிருப்பு பற்றி அமைச்சர் தகவல்!

Comments Off on மருந்துகள் கையிருப்பு பற்றி அமைச்சர் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரொனா தொற்று குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. இதையடுத்து, கொரோனா தொற்றைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் வேண்டி, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. […]

Continue reading …

எலான் மஸ்க்கின் திடீர் முடிவு!

Comments Off on எலான் மஸ்க்கின் திடீர் முடிவு!

குருவி என்ற லோகோ டுவிட்டர் ஆரம்பித்த காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென நாய் லோகோவை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மாற்றினார். அவருடைய இந்த முடிவுக்கு டுவிட்டர் பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தது. தற்போது மீண்டும் குருவி லோகோ பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு […]

Continue reading …

நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

Comments Off on நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

பொதுமக்கள் நாளை சென்னை மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை பிரதமர் மோடி நாளை தமிழகம் வந்து சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துவிட்டு அவர் முதுமலை செல்லவுள்ளார். நாளை பிரதமர் வருகையையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு பதிலாக அவர் சென்னை மெரினாவில் […]

Continue reading …