Home » Entries posted by Shankar U (Page 313)
Entries posted by Shankar

வெற்றிமாறன் படத்திற்கு பிரபலத்தின் டுவிட்!

Comments Off on வெற்றிமாறன் படத்திற்கு பிரபலத்தின் டுவிட்!

நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விடுதலை” திரைப்படத்தை பார்த்த பிரபலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து, படத்திற்கு சென்சார் குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன நிர்வாகி செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், “வெற்றிமாறனின் “விடுதலை” […]

Continue reading …

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

Comments Off on கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும். மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் […]

Continue reading …

கார்த்திக் சிதம்பரத்தை நிராகரித்த ராகுல் காந்தி!

Comments Off on கார்த்திக் சிதம்பரத்தை நிராகரித்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இன்று பாராளுமன்றத்திற்கு வந்தபோது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அவரது கையை குலுக்கி வரவேற்று பேசினர். எதிரே வந்த கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தியின் கையை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் ஆகியவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதையே இது காட்டுகிறது என்று கூறப்படுவதால் […]

Continue reading …

“மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’’; முதலமைச்சரின் டுவீட்!

Comments Off on “மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’’; முதலமைச்சரின் டுவீட்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி இடம்பெற வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், “மக்களின் உணர்வுகளை மதியுங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி (தயிர்), கர்நாடகத்தில் தஹி (மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் […]

Continue reading …

கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

Comments Off on கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

கடந்தாண்டு இறுதியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பாக இப்போது ஷூட்டிங் […]

Continue reading …

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அப்டேட்!

Comments Off on பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அப்டேட்!

ஏப்ரல் 28ம் தேதி “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் […]

Continue reading …

நோக்கியா டெக்னாலஜி திருடப்பட்டதா?

Comments Off on நோக்கியா டெக்னாலஜி திருடப்பட்டதா?

ஐரோப்பிய நாடுகளை விட்டு நோக்கியா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருடிய விவகாரத்தில் ஓப்போ, ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் ப்ராண்டுகளில் முக்கியமானவையாக இருப்பவை ஒன்ப்ளஸ், ஓப்போ நிறுவனங்கள். இந்நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. ஓப்போ, ஒன் ப்ளஸ் நிறுவனங்கள் மீது பின்லாந்தை தலைமையாக கொண்ட பிரபல […]

Continue reading …

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உதவி!

Comments Off on மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உதவி!

பூ வியாபாரம் செய்து வருபவர் கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்த ஜோதி. இவர் போலியோ நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கையை நடத்தி வருகிறார். நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் வழங்கி உதவிடுமாறு மனு அளித்தார். அந்த மனு உடனடியாக மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஸ்கூட்டரை […]

Continue reading …

பவானி ஆற்றில் மிதந்து வந்த உடல்!

Comments Off on பவானி ஆற்றில் மிதந்து வந்த உடல்!

பவானி ஆற்றில் தலையில்லாத உடல் ஒன்று மிதந்து வந்துள்ளதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியிலுள்ள பவானி ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தலை இல்லாத ஒரு உடல் மிதந்து வந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் தலையில்லாத அந்த உடலை கைப்பற்றியது. அது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் மற்றும் […]

Continue reading …

அஜீத் திரைப்படம் பற்றி லைகா நிறுவனம் பதில்!

Comments Off on அஜீத் திரைப்படம் பற்றி லைகா நிறுவனம் பதில்!

லைகா நிறுவனம் அஜீத் 62வது திரைப்படத்தின் அப்டேட் பற்றிய பதில் அளித்துள்ளது. நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித் 62வது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான […]

Continue reading …