Home » Entries posted by Shankar U (Page 315)
Entries posted by Shankar

காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

Comments Off on காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் காணாமல் போனார். அவரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த ஜெகன்ஸ்ரீ என்ற தனியார் கல்லூரி மாணவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தனர். ஜெகனின் நண்பர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவர்கள் தான் […]

Continue reading …

பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்டரால் பரபரப்பு!

Comments Off on பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்டரால் பரபரப்பு!

“பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆன்லைன் ரம்மியை விட மோசமானது டாஸ்மாக், அதை மூடுங்கள்” என்று பதிவிட்டள்ளார். இதுவரையிலும் ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. “ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது, எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள். குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம், இக்கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு எழுக்காதீர்கள். உங்களால் தாங்கிக் கொள்ள […]

Continue reading …

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்!

Comments Off on கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்!

சுற்றுலா பயணிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய், சிறியவர்களுக்கு பத்து ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றும் வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் சிறியவர்களுக்கு 25 என்றும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Continue reading …

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்!

Comments Off on 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்!

மேயர் பிரியா சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்னாக்ஸ் வழங்கப்படும் என்றும் மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறை கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023&24ம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி […]

Continue reading …

நாடாளுமன்றம் கூட்டம் ஒத்திவைப்பு!

Comments Off on நாடாளுமன்றம் கூட்டம் ஒத்திவைப்பு!

இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய ஒரே நாளில் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நிமிடமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கூச்சம் குழப்பம் நிலவியது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவை மாலை 4 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் […]

Continue reading …

திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

Comments Off on திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

புதுச்சேரி சட்டமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சமீபத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்திக்கு தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்ததால் மாலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பாண்டிச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடர் காலை தொடங்கிய போது ராகுல் […]

Continue reading …

சூர்யா மற்றும் கார்த்தி நடிகர் அஜீத்துடன் சந்திப்பு!

Comments Off on சூர்யா மற்றும் கார்த்தி நடிகர் அஜீத்துடன் சந்திப்பு!

நடிகர் அஜீத்தின் தந்தை மறைவிற்கு நடிகர் அஜித்தை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத்தை நேரில் சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் நேரில் சென்று அஜீத்துக்கு ஆறுதல் அளித்தனர். இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத் வீட்டிற்கு சென்று […]

Continue reading …

திருமண விழாவில் ஆவேசமாக பேசிய ஈபிஎஸ்!

Comments Off on திருமண விழாவில் ஆவேசமாக பேசிய ஈபிஎஸ்!

திருமண விழா ஒன்றில், “அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் இருக்கிறார்கள். நான் இல்லாவிட்டால் இன்னொரு தொண்டர் இந்த கட்சியை வழிநடத்துவார்” என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், “ஐம்பது ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான். டெல்டா விவசாயிகள் பாதுகாக்கப்பட்டது அதிமுக அரசில்தான். அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் உள்ளனர் என்றால் இந்த பழனிச்சாமி இல்லை என்றால் யாராவது […]

Continue reading …

குரூப்-4 முறைகேடு?; அண்ணாமலை!

Comments Off on குரூப்-4 முறைகேடு?; அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஓரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றுள்ளதில் முறைகேடு நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி, அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்சர் உள்ளிட்ட 11 வகைப் பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை மாதம் […]

Continue reading …

பெண்கள் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் விளக்கம்!

Comments Off on பெண்கள் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாதா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் அமலாக்கம் செய்ய உள்ள நிலையில் யாருக்கெல்லாம் இத்திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …