
திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் அம்மாவட்டத்தில் வரும் 22ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இதையடுத்து இன்று முதல் வரும் 22ம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை திருச்சி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதையடுத்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் […]
Continue reading …
கைதி ஒருவர் பீகார் மாநிலத்தில் சிறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது மொபைல் போன் வைத்திருந்ததை கண்டுபிடித்ததால் அந்த போனை அவர் முழுங்கி விட்டதால் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்திலுள்ள கோபல்கஞ்ச் சிறையில் கைதிகள் மத்தியில் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது அடுத்து சிறை உயர் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கைசர் அலி என்ற கைதி மொபைல் போன் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் திடீரென மொபைலை […]
Continue reading …
பெண் ஒருவர் கள்ளக்காதலனுக்காக தனது கணவனையும், மாமியாரையும் கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி நகரிலுள்ள நரேங்கி பகுதியில் வசித்து வந்த அமர்ஜோதி டே. இவரது தாயார் சங்கரி டே. சில ஆண்டுகளுக்கு முன்பு அமர்ஜோதி டேவுக்கு வந்தனா கலீடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரது திருமண வாழ்க்கையும் நன்றாக போய்க் கொண்டிருந்தபோது வந்தனாவுக்கு தன்ஜீத் தேகா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருங்கி […]
Continue reading …
ஒய்எஸ்ஆர் ஷர்மிளா தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், கேசிஆர் தான் தலிபான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷர்மிளா கடந்த சில நாட்களாக தெலுங்கானா அரசை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். ஷர்மிளா கூறுகையில், “தெலுங்கானா முதலமைச்சர் என்னை பார்த்து பயப்படுகிறார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. எனது நடைப்பயணம் 3000 […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், “குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட மாணிக்கம் என்ற 26 வயது நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது […]
Continue reading …
காரில் பெட்ரோல் நிரப்பும் ரோபோட்டை பின்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வகைகளில் உலகில் பல வேலைகளுக்கு மனிதர்களுக்கு பதிலாக ரோபோட் செய்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காரில் பெட்ரோல் உள்பட எரிவாயுவை நிரப்புவதற்காக ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ரோபோட் காரில் மிகச் சரியாக எரிபொருளை நிரப்பும். கார் உரிமையாளர்கள் காரில் இருந்து இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை. காரின் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர்களுக்கு கூட்டம் கூடும், ஆனால் ஒட்டு விழாது என்று கமலின் பிரச்சாரத்தை பற்றி கருத்து கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நடிகர்கள் பிரச்சாரத்துக்கு வந்தால் அவரை பார்க்க கூட்டம் கூடும், ஆனால் அவர்கள் பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள், “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களை கூட்டிக்கொண்டு வந்து ஓட்டு போட்டு கேட்டபோது […]
Continue reading …
பல திரைப்படங்களின் மூலம் தனது நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்ந்தது. சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு […]
Continue reading …
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் அமெரிக்காவில் அடுத்தடுத்து மர்ம பொருள்கள் வான் பரப்பில் தோன்றி வரும் நிலையில் அவர், “எனது ஏலியன் நண்பர்கள் தான் வந்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு அமெரிக்கா வான்பரப்பில் முன்னர் மர்ம பலூன்கள் பறந்த நிலையில் அதை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என்று கூறப்பட்டது என்பதும், ஆனால் சீனா அதை மறுத்தது. இதையடுத்து […]
Continue reading …
சமீபத்தில் அமெரிக்காவின் வானில் தோன்றி வரும் உளவு பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ அணு சக்தி தளம் மீது கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று பறந்து சென்ற உளவு பலூன் ஒன்றை கடல் பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேநாளில் அலாஸ்காவிலும் மர்ம பொருள் ஒன்று தோன்ற அதையும் அமெரிக்க வான்படை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் அண்டை தேசமான கனடாவிலும் பறக்கும் பொருள் ஒன்றை தாங்கள் […]
Continue reading …