Home » Entries posted by Shankar U (Page 343)
Entries posted by Shankar

பன்னாட்டு நிறுவனத்திலும் வருமானவரி சோதனையா?

Comments Off on பன்னாட்டு நிறுவனத்திலும் வருமானவரி சோதனையா?

வருமானவரியினர் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆகிய 11 மாநிலங்களில் 64 அலுவலகங்களில் […]

Continue reading …

இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

Comments Off on இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

இந்தியாவின் யூபிஐம், சிங்கப்பூரின் பேநௌ ஆகிய இரண்டு பணத்தை பரிமாற்றம் செய்யும் செயலிகள் தொடங்கி உள்ளதால் இருநாட்டின் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்குமான இச்செயல் இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் […]

Continue reading …

தாதாசாகேப் பால்கே விருதுகள் யார் யாருக்கு?

Comments Off on தாதாசாகேப் பால்கே விருதுகள் யார் யாருக்கு?

திரைப்படங்கள் இந்தியாவில் முதன்முதலாக உருவாக காரணமாக இருந்த இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் பல்வேறு பிரிவுகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரம்: சிறந்த திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ், சிறந்த இயக்குனர் : ஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்), சிறந்த நடிகர் : ரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா), சிறந்த நடிகை […]

Continue reading …

அமைச்சர் உதயநிதியின் உடனடி நடவடிக்கை!

Comments Off on அமைச்சர் உதயநிதியின் உடனடி நடவடிக்கை!

தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன. அவ்வபோது மாணவ அமைப்புகளிடையே ஏற்படும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் என்ற மாணவரை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ […]

Continue reading …

பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!

Comments Off on பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட மாநிலத்தவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல், பிரதமரை இழிவாக பேசிய வீடியோ வைரலான நிலையில் அந்த இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டு நபர்கள் இடையேயான மோதல் கடந்த சில காலமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் இரு தரப்பிலும் பகைமை உணர்வு அதிகரிப்பதாக அஞ்சப்படுகிறது. சமீபத்தில் ரயில் ஒன்றில் பயணிக்கும் வடமாநில இளைஞர்களை தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கியதுடன், பிரதமர் மோடி […]

Continue reading …

கூடுதல் விமான சேவை சென்னையில் தொடக்கம்!

Comments Off on கூடுதல் விமான சேவை சென்னையில் தொடக்கம்!

பல வெளிநாடுகளுக்கு சென்னையிலிருந்து விமான சேவை இருந்து வருகிறது. தற்போது இன்னும் கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையிலிருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய பல சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு […]

Continue reading …

பேருந்து நிலையத்தின் மேலேறி தற்கொலை முயற்சி!

Comments Off on பேருந்து நிலையத்தின் மேலேறி தற்கொலை முயற்சி!

இன்று காலை நெல்லை பேருந்து நிலையத்தின் மேலேறி வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பில்டிங் மேலே ஏறி ரகுவரன் என்ற வாலிபர் கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கீழே வலை விரித்து அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். பின்னர் விசாரணை செய்ததில், தான் வேலை செய்த இடத்தில் சம்பளம் ஒழுங்காக தராததால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் […]

Continue reading …

முன்னாள் நிதியமைச்சரின் கருத்து!

Comments Off on முன்னாள் நிதியமைச்சரின் கருத்து!

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்பதாலும் தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதாலும்தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ப சிதம்பரம், “பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையில்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை. பெரியார் காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக” என்று வட இந்தியர்களின் தமிழக […]

Continue reading …

ஐபோனுக்காக டெலிவரி பாய் எரித்து கொலை!

Comments Off on ஐபோனுக்காக டெலிவரி பாய் எரித்து கொலை!

ஐபோனுக்காக டெலிவரி பாயை இளைஞர் எரித்து கொன்ற கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஹேமந்த் தத். ஐபோன் மீது ஆசைக்கொண்ட இவர் பல நாட்களாக ஐபோன் வாங்க முயற்சித்து வந்துள்ளார். சமீபத்தில் ஆன்லைனில் செகண்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி செய்ய கடந்த 7ம் தேதி ஹேமந்த் நாயக் என்ற டெலிவரி பாய் வந்துள்ளார். காசு எடுத்து வருவதாக […]

Continue reading …

உத்தரபிரதேசத்திலும் ஆளுநரை எதிர்த்து கோஷம்!

Comments Off on உத்தரபிரதேசத்திலும் ஆளுநரை எதிர்த்து கோஷம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரை நோக்கி “ஆளுநரே வெளியே போ” என்று கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது திடீரென “ஆளுநரே திரும்பி […]

Continue reading …