
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி உளள் சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மையம் கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இன்று காலை திடீரென அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி கடைசியாக […]
Continue reading …
பிரபல விக்கிப்பீடியா தளம் இஸ்லாமிய மதம் குறித்த கருத்துகளை நீக்காததால் அந்த தளத்தையே பாகிஸ்தான் முடக்கியுள்ளது. விக்கிப்பீடியா இணையத்தில் அதிகமான வரலாற்று சம்பவங்கள், நபர்கள், அறிவியல் விளக்கங்கள் என பல தலைப்புகளிலும் தகவல்களை வழங்கும் தளம். உலகம் முழுதும் பலரால் இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதிலுள்ள தகவல்களை பார்வையாளர்களே எடிட் செய்யவும் முடியும். இந்நிலையில் சமீபத்தில் விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுள் குறித்து சர்ச்சை மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கருத்துகளை 48 மணி […]
Continue reading …
மூத்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். வாணி ஜெயராம் வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1971ம் ஆண்டு “குட்டி” என்ற இந்திப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஐம்பது ஆண்டுகளாக பாடகியாக இருந்தவர். இவர் 19 மொழிகளில் சினிமா, தனிப்பாடல்கள், பக்தி பாடல்கள் என பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வாந்த வாணி ஜெயராம் (78) இன்று அவரது இல்லத்தின் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து பதிலளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே முரண்பாடுகள் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் […]
Continue reading …
தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா உட்கட்சி எதிர்ப்பு அணி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில தலைநகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது. இந்த இமெயில் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்ஐ வரவழைத்து இன்னொரு பொது குழு கூட்டி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அதிமுக பொது குழு வழக்கில் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று நீதிமன்றத்தில் அதிமுக பொது குழு விசாரணை நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வாதாடி வருகின்றனர். இந்த வாதத்திற்கு பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை […]
Continue reading …
கடந்த 19 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் இப்போது ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்துவரும் நிலையில் […]
Continue reading …
மற்றொரு தமிழ் நடிகருக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்று வரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை. இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த […]
Continue reading …
பல கட்சிகளிலும் மாறி மாறி இருந்த பழ.கருப்பையா தற்போது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது புது கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அக்கட்சிக்கு தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்று பெயரிட்டுள்ளார். தனது கட்சிக்கான முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம். கட்சியின் […]
Continue reading …
நடிகர் விஜய் நடித்து வரும் 67வது திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பெரியளவில் வைரலாகி வருகிறது. படத்திற்கு “லியோ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த படத்தின் டிரெயிலர் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் இவ்வாண்டு அக்டோபர் 19ம் […]
Continue reading …