திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில், 28.02.2024-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன்கோவில் தெருவில் உள்ள அன்னதான சத்திரம் மற்றும் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்நகர், மாங்கல்ய மஹாலில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் “சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்” (Awareness Programme on Social HARMONY) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள், காவல் உதவி ஆணையர், ஸ்ரீரங்கம் சரகம் மற்றும் […]
Continue reading …நாளை நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்புடன் 875 வழித்தடங்களில் வினாத்தாள்கள் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 7.72 லட்சம் பேர் +2 பொதுத்தேர்வை நாளை எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Continue reading …முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த விருப்ப ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஆந்திரப் பிரதேச அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இம்தியாஸ், விருப்ப ஓய்வு பெற்று இன்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார்
Continue reading …ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக பிரமுகர் உள்பட நால்வர் கைது! ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைது. தலைமறைவான 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஏற்கனவே பல்வேறு […]
Continue reading …விராலிமலையில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி சார்பில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விராலிமலையில் நடைபெற்றது. பேரணியை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது விராலிமலை காமராஜர் நகரிலிருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம், கடைவீதி சட்டமன்ற அலுவலகம் வழியாகச் சென்று சோதனைச்சாவடியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில் […]
Continue reading …முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி தெற்குமாவட்ட திமுக சார்பில்நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் நாளை (மார்ச் 1 – ந் தேதி) திமுகதலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள், மரம் நடுதல், இரத்தம் தானம் செய்தல் கழக கொடி ஏற்றுதல் என பொது […]
Continue reading …திருச்சி மாவட்டத்தில் 30,003 பேர் பிளஸ்டூ தேர்வு எழுதுகின்றனர் 11ஆம் வகுப்பிற்கு 32,313 பேரும் பங்கேற்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் மார்ச் 1-ந் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 30,003 பேரும், 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,313 பேரும் பங்கேற்கவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மார்ச 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் மார்ச் […]
Continue reading …அதிமுகவின் பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ளும் காலம் வரும் திருச்சியில் நடிகை விந்தியா பேச்சு. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குப்தா, ரோஜர்,எம்ஆர்ஆர். முஸ்தபா, நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ்,கயிலை கோபி உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஆவின் முன்னாள் சேர்மன், ஜெயலலிதா […]
Continue reading …“இது மரணம் அல்ல… சட்டக் கொலை…” ✦ 33 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சட்ட போராட்டப் பயணம் சாந்தன் சாவை பார்க்கவா? ✦ விடுதலை, விடுதலை என்று போராடி சாந்தனின் சாவைத்தான் இன்று பார்த்துள்ளோம் ✦ பொதுசிறையில் இருந்து விடுதலையாகி, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளார்கள், அதற்காகவா போராடினார்கள் ? ✦ சாந்தனின் கடைசி விருப்பம் அவரது தாயை பார்க்க வேண்டும் என்பது, அதைக் கூட நிறைவேற்றவில்லை ✦ சாந்தனுடைய இறப்பு, திரைப்படங்களில் வரக்கூடிய உச்சகட்ட காட்சியைப் போல உள்ளது; […]
Continue reading …மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்பு. தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல். ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில கலைப் […]
Continue reading …