Home » Entries posted by Ramesh M (Page 6)
Entries posted by Vaalmihi

நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலிசார் சம்மன்.

Comments Off on நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலிசார் சம்மன்.

நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலிசார் சம்மன். மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலீசார் சம்மன். மேலும் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு துணைதலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.

Continue reading …

லஞ்ச ஒழிப்பு  சோதனையில் சிக்கிய ஆண்டிபட்டி வட்டாட்சியர்.

Comments Off on லஞ்ச ஒழிப்பு  சோதனையில் சிக்கிய ஆண்டிபட்டி வட்டாட்சியர்.

லஞ்ச ஒழிப்பு  சோதனையில் சிக்கிய ஆண்டிபட்டி வட்டாட்சியர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் வட்டாட்சியர் ஒரு லட்சம் லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Continue reading …

தேவஸ்தானம் போர்டு முடிவு சபரி மலை வரும் பக்தர்களுக்கு இனி காப்பீடு வழங்க முடிவு…!

Comments Off on தேவஸ்தானம் போர்டு முடிவு சபரி மலை வரும் பக்தர்களுக்கு இனி காப்பீடு வழங்க முடிவு…!

தேவஸ்தானம் போர்டு முடிவு சபரி மலை வரும் பக்தர்களுக்கு இனி காப்பீடு வழங்க முடிவு…! இனி வரும் காலங்களில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏதேனும் விரும்ப தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு காப்பீடு திட்டங்கள் மூலம் உதவிகள் செய்ய திருவிதாங்கூர் தெவஸ்தானம்போர்டு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக பல காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டு ஆன்லைனில் தரிசனத்திற்கான டிக்கெட் பதிவு செய்யும் போதே காப்பீட்டுக்கான தொகை பத்து ரூபாயும் சேர்த்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

Continue reading …

மதுரை காமராஜ் பல்கலை, கார்மேகம் தலைமையில் கன்வீனர் கமிட்டி தேர்வு.

Comments Off on மதுரை காமராஜ் பல்கலை, கார்மேகம் தலைமையில் கன்வீனர் கமிட்டி தேர்வு.

மதுரை காமராஜ் பல்கலை, கார்மேகம் தலைமையில் கன்வீனர் கமிட்டி தேர்வு. மதுரை காமராஜ் பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் கமிட்டியை தேர்வு செய்ய உயர்கல்வி செயலர், கார்த்திக் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதன்படி, கமிட்டி ஒருங்கிணைப்பாளராக கார்மேகம், உறுப்பினர்களாக வாசுதேவன் (கவர்னர் பிரதிநிதி), தவமணி கிறிஸ்டோபர் (கல்வி பேரவை பிரதிநிதி), மயில்வாகனன் (பல்கலை பிரதிநிதி) ஆகியோர் கொண்ட ‘கன்வீனர் கமிட்டி’ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Continue reading …

மதுரை சமூக சேவகிக்கு “அறம்” விருது வழங்கினார் நடிகர் பாக்யராஜ்.

Comments Off on மதுரை சமூக சேவகிக்கு “அறம்” விருது வழங்கினார் நடிகர் பாக்யராஜ்.

மதுரை சமூக சேவகிக்கு “அறம்” விருது வழங்கினார் நடிகர் பாக்யராஜ். மதுரை சமூக சேவகி வனிதா ரவி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஆதரவற்ற முதியவர்களுக்கு அரிசி, புத்தாடைகள், இனிப்பு போன்றவற்றை வழங்கி வருகிறார். மேலும் மதுரையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார். இவரது சேவையை பாராட்டி, நேற்று முன்தினம் நடைபெற்ற அறம் விருதுகள் 2024 நிகழ்ச்சியில், நடிகர் பாக்யராஜ் “சிறந்த சமூக சேவைக்கான அறம் விருது” வழங்கி கௌரவித்தார்.

Continue reading …

லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா  சம்பவ இடத்திலேயே பலி..

Comments Off on லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா  சம்பவ இடத்திலேயே பலி..

லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா  சம்பவ இடத்திலேயே பலி.. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சானிதா இவர் திருமணமானவர். இவருட  கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் சானியா எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியபோது, சார்ஜரை கையில் பிடித்தவாரே சானியா இறந்து கிடந்துள்ளார்.

Continue reading …

கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு.

Comments Off on கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு.

கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 12-ம் நாளான இன்று ( திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள் புறப்பட்டு பனகல் வீதி, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி தெரு, கீழவாணி மூல வீதி, தெற்கு வாணி மூல வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரம் ஆகிய பகுதிகளில் […]

Continue reading …

கும்பக்கரை அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. கொட்டும் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் .

Comments Off on கும்பக்கரை அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. கொட்டும் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் .

கும்பக்கரை அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. கொட்டும் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டத்திற்கு கடந்த 10 நாட்களாக கன மழை மற்றும் அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்ததால் அருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவான நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த […]

Continue reading …

வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்து பேர் கைது. இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

Comments Off on வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்து பேர் கைது. இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

தேனியில் வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்து பேர் கைது. இரண்டு பேர் தப்பி ஓட்டம். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு […]

Continue reading …

கரையை கடந்தது ‘ரிமால்’

Comments Off on கரையை கடந்தது ‘ரிமால்’

கரையை கடந்தது ‘ரிமால்’ வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கும் இடையே கரையை கடந்தது ‘ரிமால்’ புயல்; வங்கதேசத்தின் மோங்லாவில் நேற்று நள்ளிரவு 10:30 மணி முதல் 12:30 மணி  வரை தீவிர புயலாக கரையை கடந்தது; மோங்லாவிலிருந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக ‘ரிமால்’ புயல் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

Continue reading …