கடந்த 2000ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் பதவியை பெற்றார். அதன் பின்னர் இந்திய அணியில் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். சிறந்த இந்திய அணியை தயார் செய்தார். விரேந்தர் சேவாக்கை தொடக்க வீரராக களம் இறங்கினார். ஜாகீர் கான், யுவராஜ் சிங், முகமது கைஃப், எம்எஸ் டோனி, ஹர்பஜன் சிங் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார்.
கங்குலியின் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளுக்கு சென்று டெஸ்ட் போட்டிகளை அதிகமாக கைப்பற்றியது. இதன்பிறகு எம்எஸ் டோனி கேப்டனாக பதவி ஏற்ற பின்னர் இவருடைய தலைமையில் டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் ஐசிசி சம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
கௌதம் கம்பீர், இர்பான் பதான், குமார் சங்ககரா, கிரேம் ஸ்மித் யார் சிறந்த கேப்டன் என்று விவாதித்த போது சௌரவ் கங்குலியை விட எம்எஸ் தோனி தான் சிறந்த கேப்டன் என கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
இதை பற்றி கௌதம் கம்பீர் கூறியது: ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியை விட எம்எஸ் டோனி சிறந்த கேப்டன். இந்திய அணிக்காக எம்எஸ் டோனி ஒயிட்-பால் பந்தியில் ஐசிசியின் டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை, ஐசிசி சம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்துள்ளார். இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சௌரவ் கங்குலி விட எம்எஸ் டோனி சிறந்தவர் என தெரிவித்தார்.