கடந்த 25ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என ஆந்திர பிரதசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதைப்பற்றி ஜெகன்மோகன் ரெட்டியின் கடிதத்தில்; ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ் பி பாலசுப்ரமணியம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பின்பு 16 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். இசைத்துறையில் புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர், எம்எஸ் சுப்புலட்சுமி, பூபேன் அசாரிகா, பிஸ்மில்லா கான் ஆகியோருக்கு பாரத ரத்னா போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 50 வருடங்களாக பெரும் பங்களிப்பை கொடுத்துள்ள எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது அளித்து கௌரவப்படுத்த வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.