தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவெற்றியூர், குடியாத்தம், உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை போல அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
இதன் பின்பு இடைத்தேர்தல் நடத்துவது சிக்கலாக இருப்பதாக நான்கு மாநில மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலியாக இருக்கும் மற்ற மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலை ஏற்றவாறு தேர்தல் நடத்துவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.