நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாய்லர் வெடித்து ஐந்து பேர் பலி!

Filed under: தமிழகம் |

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் பின்னர் காயமடைந்த 15 க்கும் மேற்பட்டவர்களை சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இந்த விபத்து வெப்பம் அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது யூனிட்டில் 150 மேற்பட்ட ஊழியர்கள் இருந்துள்ளனார்.