வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜயின், வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது, அதில் முறைகேடு செய்யவே முடியாது என்பதை தேர்தல் ஆணையம் பல முறை தெளிவுபடுத்திவிட்டது என்று கூறினார் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சவால் விட்டும் இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் […]
Continue reading …தனக்கும் தனது கணவர் மாதவன் உயிருக்கும் 2 பேரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 2 பேர் தங்களை பின் தொடர்ந்து வருவதாகவும், பெண் என்று கூட பாராமல் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொந்தரவு அளித்து வருவதாகவும், சில ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தீபா கூறியுள்ளார். தனக்கு கால்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால், […]
Continue reading …மனுஸ்மிருதி பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி யான விசிக தலைவர் திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கம் கொடுக்க திருமாவளவன் ஒன்றும் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல என்று […]
Continue reading …திருப்பூர் மாவட்டத்தில்,ரூபாய் 31 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, அடிக்கலும் நாட்டினார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். இதை தொடர்ந்து, விவசாயிகளுடனும் , தொழில்துறை பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசின் நல்ல நடவடிக்கைகளால், வெளிமாநில தொழிலாளர்கள் […]
Continue reading …இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்து பாருங்கள், 5 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தை ஜொலிக்க வைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார். கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அரசியல் வன்முறை காரணமாக கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய அமித்ஷா,அதற்கு இதுவரை மம்தா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது […]
Continue reading …நடிகர் விஜய் பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிக்கு, விஜயே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த கட்சியில் எனது ரசிகர்கள் சேரக்கூடாது தடை போட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்ன எஸ் .ஏ.சந்திரசேகர். அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியை தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர், அப்போது உங்கள் கட்சிக்கு விஜய் தடை போட்டுள்ளாரே என்பது பற்றி கேள்வி எழுப்பினர். விஜய் அப்படியா சொன்னார் என எதுவும் […]
Continue reading …இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் சேர்ந்து 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்புக்கு 6.86 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அமெரிக்க […]
Continue reading …ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பே இல்லை என்று ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்து பேசிய நரசிம்ம மூர்த்தி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் உள்ளதா, அவர் எத்தனை நாட்கள் பரோல் மூலமாக வெளியே வந்தார் என்பது குறித்து தகவல் உரிமையறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், இதற்கு எதிராக சசிகலா வைத்த கோரிக்கையை நிராகரித்து சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளதாகவும் […]
Continue reading …இ-சஞ்சீவனி ஓபிடி சேவையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் முதலமைச்சரால் மே மாதம் 13-ந்தேதி இ சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சேவையை […]
Continue reading …பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு கருத்துக்கணிப்பு நடைபெற்றத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தகவல் கிடைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 243 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில் புதிய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி […]
Continue reading …