Home » Archives by category » அரசியல் (Page 150)

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து விளக்கம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். ஆதார் கார்டில் உள்ள எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் பரவி உள்ளது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் […]

Continue reading …

ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்!

Comments Off on ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்!

அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்- என்று விமர்சித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், மூன்று தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியில், அதிமுக எதிக்கட்சித் தலைவர், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதிமுக அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து, இடித்து, புத்தகங்களை எடுத்துச் சென்றால் எப்படி […]

Continue reading …

சி.வி.சண்முகம் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

Comments Off on சி.வி.சண்முகம் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி தினகரன் தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார். அதனால்தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார். டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர். அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள். டிடிவி தினகரன் ஒரு துரோகி, அம்மாவுக்கும் […]

Continue reading …

மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

Comments Off on மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்!

நீதிமன்றம் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தலையிட முடியாது என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது மத்திய அரசின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் தகுதியற்ற நபர்கள் […]

Continue reading …

ரயில் மறியல் போராட்டம்; செல்வராசு எம்.பி. அறிவிப்பு!

Comments Off on ரயில் மறியல் போராட்டம்; செல்வராசு எம்.பி. அறிவிப்பு!
ரயில் மறியல் போராட்டம்; செல்வராசு எம்.பி. அறிவிப்பு!

கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு வரும் நவம்பர் 28ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும், மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளும் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேத்துறை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நாகை தொகுதி எம்.பி. செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “டெல்டா பகுதிகளை […]

Continue reading …

டிடிவி தினகரனின் தேர்தல் அறிவிப்பு!

Comments Off on டிடிவி தினகரனின் தேர்தல் அறிவிப்பு!

டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்று அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் அந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணிகளும் இம்முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எந்த கூட்டணி வீழ்த்துகிறதோ, அந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்று […]

Continue reading …

கனவு இல்லத் திட்டத்திற்கு எழுத்தாளர்கள் தேர்வு!

Comments Off on கனவு இல்லத் திட்டத்திற்கு எழுத்தாளர்கள் தேர்வு!

கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய, மாநில அரசின் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத்திட்டம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பின்படி, 2021-2022ம் ஆண்டிற்காக கனவு இல்லத் திட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது மற்றும் கலைஞர் விருது பெற்ற மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் கவிஞருமான புவியரசு, பூமணி, கு. மோகனராசு, இமயம், ஆகிய […]

Continue reading …

ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ் பேட்டி!

Comments Off on ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ் பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரை சந்தித்த பின்பு தமிழகத்தில் திறமையற்ற பொம்மை அரசு என்று கூறியுள்ளார். ஆளுனரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார்” என்று கூறினார்.

Continue reading …

முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

Comments Off on முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

முன்னாள் பிரதமர் ஒருவர் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்- மற்றும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போது “இந்தியாவில் பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லுறவை நாங்கள் விரும்பினாலும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் இரு நாட்டிற்கும் இடையே […]

Continue reading …

சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

Comments Off on சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரானார். அதன்பின் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சினேகனுக்கு தன் தலைமையில் திருமணமும் நடத்திவைத்தார் நடிகர் கமலஹாசன். தற்போது சினேகனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சினேகன் கட்சியை விட்டி வெளியேறி சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆலோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continue reading …