Home » Archives by category » இந்தியா (Page 123)

இந்தியாவில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on இந்தியாவில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, அக் 1: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,727 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,727 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. 28,246 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Comments Off on குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடில்லி, அக் 1: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். வழக்கறிஞரான இவர், 1991ம் ஆண்டு, பாஜக கட்சியில் இணைந்தார். பின், 1994ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை, ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வந்தார். பின், […]

Continue reading …

மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

Comments Off on மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

கொல்கத்தா, செப் 30: மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். பின் முதலமைச்சராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜிக்கு, 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் […]

Continue reading …

இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 23,529 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 23,529 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,39,980 ஆக உயர்ந்துள்ளது. 28,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி, செப் 29: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் சேர்ந்து மனு தாக்கல் செய்துள்ளனர். நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக, நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில், தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த, செப்டம்பர் 12ஆம் தேதி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். […]

Continue reading …

நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

Comments Off on நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

பஞ்சாப், செப் 29: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வராக இருந்த அமரீந்தருக்கும் இடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடித்துவந்த நிலையில், சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் அமரீந்தர். பின், மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். அவருடன், அமைச்சரவையிலும் பலர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் மற்றும் எல்க்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் மற்றும் எல்க்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னை வந்த இரு ஆண் பயணிகளிடம் இருந்து, 1.38 கிலோ தங்கம், மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத் தகவல் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த, இரு ஆண் பயணிகளை, சுங்கத்துறையினர் இடைமறித்து, அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது 24 தங்கத்துண்டுகள் லேப்டாப் சார்ஜரில், கருப்பு டேப் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த தங்கத் துண்டுகளின் எடை 1.38 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.58.04 இலட்சம். இவை தவிர மேலும் 15 ஐ-போன்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றைக் கடத்தி வந்த இருவரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Continue reading …

லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து!

Comments Off on லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து!

லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்து தெரிவுத்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில், “சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

Continue reading …

இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், 201 நாட்களுக்குப் பின், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, 20,000க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 18,795 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, […]

Continue reading …

மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

Comments Off on மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

புதுடெல்லி, செப் 28: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தனின்பேரில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேற்று (27.09.2021) சந்தித்தார். சரம் சக்தி பவனில் நடந்த இந்த சந்திப்பில், தமிழ்நாடு அரசின் […]

Continue reading …