மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து கசிந்தது அமோனியா வாயு தான் என உறுதி செய்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியா எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லிகிராமாக […]
Continue reading …போலீசார் சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது […]
Continue reading …இளைஞர் ஒருவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு போலீசாருக்கு சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ரயில்வே ட்ராக் அருகே கழுத்து மற்றும் உடலில் பலத்த காயத்துடன் இளைஞரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் புளியந்தோப்பு பி.எஸ் […]
Continue reading …கணவன் கண் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கிரைன் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி மனைவி பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆவுடைபொய்கை அருகே கேரளா வைத்தியசாலை ஒன்றில் பெட்டிக்கடை வைத்துள்ள நாச்சியப்பன் என்பவரின் மனைவி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் பணிபுரிந்து வரும் வளர்மதிக்கு சிகிச்சை பார்த்து வருகின்றனர். காரைக்குடி பகுதியில் லேசான மழை பெய்து வரும் பொழுது கணவன் நாச்சியப்பன் உடன் வளர்மதி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மழை பெய்ததால் […]
Continue reading …திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ தியேட்டர் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சென்னையில் உள்ள பல இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே சில முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மயிலாப்பூரில் பள்ளம் ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள காசினோ திரையரங்கம் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. தற்சமயம் பள்ளத்தை […]
Continue reading …சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், “மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, […]
Continue reading …ரேஷன் கடை ஊழியர்களுக்கு புயல் மற்றும் வெள்ள நிவாரண தொகை ரூ.6000 வழங்குவதன் தொடர்பாக பல நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று முதல் இதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த நெறிமுறைகள் பின்வருவமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவை & நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் […]
Continue reading …சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழந்ததால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்தனர். அதையடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர். தற்போது நடிகர் சூரி தனது பங்காக அமைச்சர் உதயநிதி இடம் 10 […]
Continue reading …சமீபத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்திற்கு தள்ளப்பட்டது. சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாவட்டத்தில தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் வசிக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் அதாவது பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கும் மேலாக […]
Continue reading …நடிகர் விஷ்ணு விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார். சென்னை முழுவதும்மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் அதிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதில் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும், தொழில் நிறுவனங்களும் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் […]
Continue reading …