சென்னை மெட்ரோ ஐபிஎல் சீசன் நடந்து வரும்போது சென்னையில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மெட்ரோ ரயில் சேவை இனி கிடையாது என அறிவித்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் சீசனை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த அனைத்து லீக் போட்டிகளுக்கும் […]
Continue reading …சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள […]
Continue reading …அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “பொன்னின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது “இந்தியன் 2”, “லால் சலாம்“, “விடாமுயற்சி” உள்பட ஒரு சில படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. […]
Continue reading …கல்லூர் மாணவர்கள் இரண்டு பேர் சென்னையில் பட்டாக்கத்தியுடன் ரயில் நிலையத்தில் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் பேருந்துகளில் அடாவடி செயல்களில் ஈடுபடுவது, பேருந்துகளில் நடனம் ஆடி, சகப் பயணிகளுக்கு இடையூறு செய்வது, ரயில் மற்றும் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது, பஸ்டே என்ற பெயரில் பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதையும் […]
Continue reading …சென்னை ஐஐடி இந்தியாவில் முதல் முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் நான்காண்டு பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதுதான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் படிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான பல்வேறு துறைகள் இயங்கி வரும் நிலையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக மருத்துவம், தொழில்நுட்பத்தில் பிஎஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மருத்துவமனை தொழில்நுட்பம் […]
Continue reading …கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். ஹரிபத்மன் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஹரிபத்மனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 16ம் தேதி […]
Continue reading …கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பாரிஸ் கார்னரில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது சென்னை பெரம்பூர் சாலையில் பழைய கட்டிடம் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிஷ்டவசமாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை என்பதால் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த கட்டிடத்தை எடுக்க மூன்று மாதத்திற்கு முன்பு அனுமதி பெறப்பட்டதாகவும் […]
Continue reading …மாநகராட்சி சென்னையில் உள்ள சாலைகளில் இனிமேல் பள்ளம் தோண்டக் கூடாது என அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் 49.32 கோடி செலவில் சாலைகள் சிகரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் 382 உள் சாலைகள் சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை சாலைகளில் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பணி நிமித்தமாக பள்ளம் தோண்டுவதாக புகார்கள் வந்துள்ளது. புதிதாக போடப்படும் தார் சாலைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு அல்லது தனியார் […]
Continue reading …கடந்த 3 மாதங்களில் சென்னை ஐஐடி வளாகத்தில் 3 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. தற்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேதார் சுரேஷ் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் எந்தவித கடிதமும் எழுதி […]
Continue reading …சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. பழமையான கட்டடம் சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது. இக்கட்டத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்ததுள்ளது. இன்று அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கியுள்ளதாகவும் […]
Continue reading …