சென்னை, ஏப்ரல் 27 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதே நிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 27 மேதகு பிரபாகரன் அவர்களை இழிவு படுத்திய மலையாள இயக்குனர் அனூப், நடிகர் துல்கர் சல்மான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “வரனே அவஸ்யமுன்ட்” என்கிற மலையாள திரைப்படத்தில் எங்களின் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரை இழிவு படுத்தும் விதமாக நாயினை வைத்து காட்சிப்படுத்தி ஏளனம் செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. கலை என்பது சமூகத்தை சீர்திருத்துவதாகவும் சமூக மாற்றத்துக்கு வித்திடுவதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு வரலாற்றுக்குரிய தலைவரை அசிங்கப்படுத்துவது எப்படி அறமாகும். […]
Continue reading …ஏப்ரல் 27 எதிர்பாராத அளவிற்கு உலகையே உலுக்கி வரும், உலகுக்கே சுகாதார சவாலாக உள்ள கோவிட் 19 நோயால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, பலமுனை அணுகுமுறையை அரசு எடுத்து வருகிறது. இந்நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் பங்காற்றும் முன்னணிப் போராளிகளுக்கு காப்பீட்டுத் துறை, உடல்நலக் காப்பீடு வழங்கி அரசின் முயற்சிகளுக்கு, பயனுள்ள முறையில் உதவி புரிந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் 15 ஏப்ரல், 2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி திருத்தியமைக்கப்பட்ட SOP விதிமுறைகளின்படி, அனைத்து துறைகளிலும் உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும் முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தொழில் துறை நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், பணியிடங்கள், அலுவலகங்கள், தலங்கள் அனைத்திலும் உள்ள பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பணியாளர்களுக்கும், மருத்துவக் காப்பீடு […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 27 துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 27 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப் படும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளன. அவற்றில் முதன்மையானது மதுவை மக்கள் மறந்திருப்பது தான். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 39 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதற்கு பிறகு இன்று வரையிலான 31 ஆண்டுகளில் மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 26 சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5மாவட்டங்களில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்ததும் பொதுமக்கள் தேன் கூட்டில் கல்லெறிந்தது போல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க நேற்றைய தினம் (25.04.2020) கடைகளிலும், சந்தைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடி விலையில்லா கொரானாவை பரப்பி விடுவார்களோ..? என்கிற அச்சத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வது தொடர்பாக நேற்று மதியம் எங்களது […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 26 உயிர் கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தி இல்லாதொழித்திட நாடு முழுவதும் 24.03.2020 முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும், விழிப்பாய் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரால் அறிவுரை வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள் முழுவீச்சில் களப்பணியாற்றி வருகின்றன. வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 26 தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளைபொருட்களைபாதுகாத்துசேமித்திட கிடங்குவசதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 26 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. ஒரு தவறும் செய்யாத குழந்தைகள் குடும்பத்தினரின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் நோய் கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 முதல் […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 24 கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆவின் பாலகங்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் […]
Continue reading …