Home » Archives by category » சென்னை (Page 70)

பரிதவித்த விவசாயிகளும் கைகொடுத்த தோட்டக்கலைத் துறை!

Comments Off on பரிதவித்த விவசாயிகளும் கைகொடுத்த தோட்டக்கலைத் துறை!

கடலூர்,மே 02 முக்கனிகளில் முதன்மையானது பலாப்பழம். அளவில் பெரியது மட்டுமல்ல, சுவையிலும் அருமையானது. நமது வரலாற்றில் பலாப்பழத்திற்கு எப்போதும் தனித்த இடம் இருந்தே வந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் பலாமரமும் பலாப்பழமும் பல பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு எனப் பல சங்கத்தொகைப் பாடல்களில் பலாப்பழம் இடம் பெற்றுள்ளது.  “சிறுகோட்டுப் பெரும்பழம்” என்று கபிலர் குறுந்தொகையில் வியந்து குறிப்பிடுகிறார். சிறு காம்பில் மிகப்பெரிய பழம் முறியாமல் தொங்கிக் கொண்டிருப்பது […]

Continue reading …

முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: தளர்வுகள் அறிவிப்பு!

Comments Off on முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: தளர்வுகள் அறிவிப்பு!
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: தளர்வுகள் அறிவிப்பு!

சென்னை, மே 2 இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் […]

Continue reading …

மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்!

Comments Off on மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்!
மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது: மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்!

சென்னை, மே 2 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள நிலையில், நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களை நோய்த் தாக்காமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை  என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் […]

Continue reading …

நிவாரண உதவிகள் வாரி வழங்கும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை.!

Comments Off on நிவாரண உதவிகள் வாரி வழங்கும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை.!
நிவாரண உதவிகள் வாரி வழங்கும் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை.!

சென்னை, மே -1 சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்த நேரத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட கூலி வேலைக்கு செல்லாமல் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கி போயிருக்கும் பொருளாதாரத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பொதுமக்களின் இன்னல் துயரங்களை போக்குவதற்காக தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையின் சார்பில் அதன் தேசிய தலைவர் V. காமராஜ அவர்களின் முயற்சியில் சென்னை திரிசூலம் பகுதியில் வாழும் பொதுமக்களின் […]

Continue reading …

ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் – அன்புமணி!

Comments Off on ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் – அன்புமணி!
ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும் – அன்புமணி!

 சென்னை, மே 1 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை  செயல்படுத்தும் பணியில் காவல்துறையினருடன் சேர்த்து ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள்  எத்தகைய பணிகளை செய்கிறார்களோ, அதே பணிகளை செய்யும்படி ஊர்க்காவல் படையினரும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த பணியின் […]

Continue reading …

தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !

Comments Off on தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !
தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக்குழு – முதல்வர் உத்தரவு !

சென்னை, ஏப்ரல் 30 கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ் நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு முதலமைச்சர் உத்தரவு. தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் […]

Continue reading …

முதல்வரின் மே தின வாழ்த்து !

Comments Off on முதல்வரின் மே தின வாழ்த்து !
முதல்வரின் மே தின வாழ்த்து !

சென்னை, 30 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே தின வாழ்த்துச் செய்தி : உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியமில்லாமல், காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் […]

Continue reading …

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்

Comments Off on வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக – இராமதாஸ்

 சென்னை, ஏப்ரல் 30 நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும்  புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு […]

Continue reading …

காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன் கோரிக்கை!

Comments Off on காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன் கோரிக்கை!
காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன்  கோரிக்கை!

சென்னை, ஏப்ரல் 29 கண்ணுக்கு தெரியாத கிருமி இப்பூமிப்பந்தில் மனித வாழ்வையே புரட்டி போட்டு விட்டது. ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்திருந்தாலும் உயிர்களைப் பறிப்பதை கொரோனா நிறுத்தவில்லை. அதிலிருந்து மீள உலகமே ஒரு பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில் பெரிதும் போற்ற வேண்டியவர்களும் வணங்குதலுக்குரியவர்களும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர். மருத்துவர்களின் தியாக உணர்வை பாராட்டி அவர்களை கௌரவித்து அவர்ளுக்கு பாதுகாப்பு முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செய்ய அரசு முன் முன்வந்திருப்பது […]

Continue reading …

முதல்வர் தலைமையில் ஆட்சித் தலைவர்கள் ஆய்வு கூட்டம்!

Comments Off on முதல்வர் தலைமையில் ஆட்சித் தலைவர்கள் ஆய்வு கூட்டம்!
முதல்வர் தலைமையில் ஆட்சித் தலைவர்கள் ஆய்வு கூட்டம்!

சென்னை, ஏப்ரல் 29 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக இன்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனோ வைரஸ் நோய் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்தும் கேட்டறியப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் பரவலின் தற்போதைய நிலைக்கு ஏற்ப எந்தந்த […]

Continue reading …