Home » Archives by category » தமிழகம் (Page 169)

பூமியை நோக்கி வரும் விண்கற்களை பற்றி நாசா தகவல்!

Comments Off on பூமியை நோக்கி வரும் விண்கற்களை பற்றி நாசா தகவல்!

நாசா விண்வெளி ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி திரிந்து வரும் நிலையில் சில விண்கற்கள் சூரிய ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இவ்வாறாக வரும் விண்கற்கள் பெரும்பாலும் பூமியில் மோதாமல் கடந்து சென்று விடுகின்றன. அவ்வாறாக இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் […]

Continue reading …

மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

Comments Off on மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். “பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். பின்னர், “இதய கோவில்,” “பகல் நிலவு,” “மௌனராகம்,” “நாயகன்” “தளபதி,” “ரோஜா,” “காற்றுவெளியிடை,” “செக்கச்சிவந்த வானம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில், இவர் இயக்கத்தில், “பொன்னியின் செல்வன்-1, 2” ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று […]

Continue reading …

கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!

Comments Off on கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!

சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழகத்தையே உலுகிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கான வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். மேல்முறையீட்டு வழக்கின் வாதங்கள் கடந்த சில மாதங்களாக முடிவு இன்று […]

Continue reading …

தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Comments Off on தொடரும் வருமான வரித்துறை சோதனை!

தொடர்ந்து கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையின் போது மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் மற்றும் மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Continue reading …

அணை கட்ட அனுமதி குடுங்க டி.கே.சிவக்குமார்!

Comments Off on அணை கட்ட அனுமதி குடுங்க டி.கே.சிவக்குமார்!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீண்ட நாளாக பேச்சு வழக்கில் இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மேகதாது திட்டம் தமிழர்களின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை வெகுவாக பாதிக்கும் என தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த துணை […]

Continue reading …

ஓய்வு பெறும் நாளில் ஓட்டுனரின் நெகிழ்ச்சி சம்பவம்!

Comments Off on ஓய்வு பெறும் நாளில் ஓட்டுனரின் நெகிழ்ச்சி சம்பவம்!

அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நேற்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் ஓட்டி வந்த பேருந்தை தொட்டு வணங்கி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்த முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் அரசுப்பேருந்து பணிமனையில் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலணி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தந்து பணியை நிறைவு செய்தார். 30 ஆண்டுகளாக ஓட்டுனராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி, நேற்று பேருந்து நிலையத்திற்குள் பேருந்தை […]

Continue reading …

101 ஆப்களில் பரவிய ஸ்பைவேர்!

Comments Off on 101 ஆப்களில் பரவிய ஸ்பைவேர்!

SpinOK என்னும் ஸ்பைவேர் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்ட் ஆப்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருட்டுப்போனதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 101 ஆப்களில் Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, கிரேசி டிராப் கேமிங் ஆகிய 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான […]

Continue reading …

விபத்துக்குள்ளான கார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Comments Off on விபத்துக்குள்ளான கார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதியதில் பெண் ஒருவர் சமீபத்தில் பலியான சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது டிரைவர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் […]

Continue reading …

பணி நீக்கம் செய்ய கோடிக்கணக்கில் செலவிட்ட மெட்டா!

Comments Off on பணி நீக்கம் செய்ய கோடிக்கணக்கில் செலவிட்ட மெட்டா!

பணி நீக்க நடவடிக்கைக்கு மெட்டா நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டது. அந்நிறுவத்தின் பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்கும், நிறுவன மறுகூட்டமைப்பு மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்ககப்பட்டதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மெட்டா நிறுவனம் 21 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது. மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை […]

Continue reading …

டில்லிக்கு கொண்டு வரப்பட்ட செங்கோல்!

Comments Off on டில்லிக்கு கொண்டு வரப்பட்ட செங்கோல்!

நாளை புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்காக செங்கோல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கியது. இது நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளது” என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து […]

Continue reading …