
ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க தனி HUID எண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஹால்மார்க்குடன் ஆறு இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய அனுமதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 இலக்க HUID எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறிந்து கொள்ளலாம் என இதற்கான பிரத்தியேக செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க […]
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரூபாய் 12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக டிசைன் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் நிலையில் சங்க கால தமிழ் புலவர்களில் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தில் இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பழக்கடை நடத்தி வரும் ஞாசேகருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகார், வல்லரசு என்ற இரு மகன்கள் உள்ளனர். ஞானசேகருக்கு வேறொரு […]
Continue reading …
போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 தடவைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% சலுகை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் சொகுசாக இருப்பதால் அரசு பேருந்துகளை நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் […]
Continue reading …
திடீரென திருவண்ணாமலை மாவட்டத்தில் 3000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று 3000 அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லவில்லை என்பதால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த […]
Continue reading …
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குறித்து குழப்பங்கள் நிலவி வருகிறது. இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் பே, போன் பெ, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக இந்தியா முழுவதும் பல்வேறு பணப்பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது. இந்த செயலிகள் மூலம் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். என்பிசிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கும் அதிகமான […]
Continue reading …
வந்தே பாரத் இந்திய நகரங்களுக்கு இடையே செல்லும் அதிவிரைவு ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎஃபி-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி இந்த வந்தே பாரத் விரைவு ரயில் (டில்லியிலிருந்து வாரணாசி வரையிலான) சோதனை ஓட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த வந்தே பாரத் ரயில்கள் மீது பயணிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன. வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் […]
Continue reading …
ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இன்று பாராளுமன்றத்திற்கு வந்தபோது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அவரது கையை குலுக்கி வரவேற்று பேசினர். எதிரே வந்த கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தியின் கையை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் ஆகியவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதையே இது காட்டுகிறது என்று கூறப்படுவதால் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி இடம்பெற வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், “மக்களின் உணர்வுகளை மதியுங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி (தயிர்), கர்நாடகத்தில் தஹி (மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் […]
Continue reading …
பூ வியாபாரம் செய்து வருபவர் கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்த ஜோதி. இவர் போலியோ நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கையை நடத்தி வருகிறார். நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் வழங்கி உதவிடுமாறு மனு அளித்தார். அந்த மனு உடனடியாக மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஸ்கூட்டரை […]
Continue reading …