
தீர்த்தவாரி குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். நேற்று சென்னை அருகே மூவரசம்பட்டியிலுள்ள குளம் ஒன்றில் 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார். சென்னையை அடுத்த மூவரசம்பட்டியிலுள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது. […]
Continue reading …
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவர் தங்கியிருந்த பங்களாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்திக்க துறை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தினமும் வருவதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார். துணை […]
Continue reading …
வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இன்று ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் காலை அறிவித்திருந்தது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று […]
Continue reading …
ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை நியமனம் செய்ய போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த அறிவிப்பிற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கும்பகோணம் உட்பட பல்வேறு வழித்தடத்தில் ஓட்டுநர்களை நியமனம் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேர்களை நியமனம் செய்வதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு போக்குவரத்து சார்பில் பயிற்சி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது- 22), பானேஷ் (வயது- 22), ராகவன் (வயது -22) யோகேஸ்வரன் (வயது- 21) […]
Continue reading …
+2 மாணவி தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பும் வழியில் இளைஞர் ஒருவர் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பகுதியிலுள்ள செக்காரக்குடி கிராமத்தில் +2 மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த மாணவி அந்த வாலிபரை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவி மீது சரமாரியாக […]
Continue reading …
இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ரவுடிகள் […]
Continue reading …
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக […]
Continue reading …
ஏப்ரல் 18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும் போது மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். ஏப்ரல் 18ம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருச்சி […]
Continue reading …
டிஜிபி பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
Continue reading …