
அமித்ஷா அதிமுக மற்றும் திமுக இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பலே திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித்சாவை சந்தித்து தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்க இருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுகவை வீழ்த்த பலவீனமாக உள்ள அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சிறந்தது அல்ல என்ற கருத்தை அண்ணாமலை முன் வைத்துள்ளதாகவும் இதனை அடுத்து […]
Continue reading …
பாராளுமன்றத்திலிருந்து திமுக எம்பிக்கள் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா குறித்து பேச அனுமதி அளிக்கவில்லை என கூறப்பட்டதையடுத்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சபாநாயகர் இடம் வேண்டுகோள் கொடுத்தனர். ஆனால் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டதன் காரணமாக மக்கள் அவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. […]
Continue reading …
பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னனடம் என பல்வேறு மொழிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகியான இவர், இங்கிலாந்து நாட்டில் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மூளையில், ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவருக்கு கழுத்தில் கடும் வலி இருந்ததாகவும், இன்று அவரைப் பார்க்கச் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தருமபுரியில் தனியார் கோழிப் பண்ணையில் மின்னல் தாக்கியதில், 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கியதில், சிட்டிலிங் அடுத்த மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் தீப்பிடித்தது. மின்னல் தாக்கி திடீரென்று தீப்பிடித்ததில், இதில் தீ கோழிப்பண்ணை முழுவதும் பரவியது. இதில், கோழிப்பண்ணையில் […]
Continue reading …
தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இயற்றப்பட இருப்பதையடுத்து அவசரமாக டில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் 6 மாதம் கழித்து இந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் இயற்ற போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. […]
Continue reading …
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு பெருமளவு வருகை புரிவதால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வட மாநில தொழிலாளர்கள் தமிழ் மக்கள் ஒப்பந்தம் செய்யும் தொகையினை விட குறைவான தொகைக்கு வேலை செய்வதால் தமிழர்களின் வேலை பாதிக்கப்படுவதாக பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல இடங்களில் தங்களது வேலை வாய்ப்பினை பறித்துகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் மாநில […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “இறைவனின் தீர்ப்புக்காக சோதனையோடு பொறுமையுடன் போராடிக் கொண்டு காத்திருக்கின்றோம். காலைப் பிடித்து பதவி வாங்கி, பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி, இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கூட்டணி கட்சிகள் இடையே சில சிராய்ப்புகள் வருவது அரசியலில் சகஜம்தான்” என டில்லியில் பேட்டியளித்துள்ளார். நேற்று டில்லி சென்ற அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா ஆகியோர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “பிரதமர் மோடி அமித்ஷா மற்றும் ஜே பி நட்டா ஆகியவர்களை பல்வேறு விஷயங்களை சந்தித்தேன். கர்நாடக மாநில தேர்தல் உள்பட பல […]
Continue reading …
இன்று மாலை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் இன்னும் முடிவுகள் வரவில்லை. இது குறித்த ஹேஷ்டேக் திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் வைரலானது. டிஎன்பிஎஸ்சி இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் எனக்கு யாரும் நண்பர்களும் கிடையாது எதிரிகளும் கிடையாது என்று கூறியுள்ளார். இன்று டில்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேலு நடித்த 23ம் புலிகேசி படம் போல் இருக்கிறது. சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகிறார்கள் என்று தினமும் கேட்டு அவர்களை கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள் குழந்தைகள் மீது வன்பத்தை காட்டுபவர்கள் […]
Continue reading …