Home » Archives by category » தமிழகம் (Page 192)

அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. ஆனால், தற்போது மீண்டும் 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்களை வரும் ஏப்ரல் மாதம் வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் ஒன்பதாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன்டிஜேசி தெரிவித்துள்ளார். இத்தகவல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை […]

Continue reading …

பேருந்து நடத்துனர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

Comments Off on பேருந்து நடத்துனர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

அரசுப் பேருந்தின் நடத்துனர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இன்று பிற்பகல் குமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் நாகர்கோவில் அருமனையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) என்பவர் நடத்துனராகவும் பேச்சிப்பறையைச் சேர்ந்த செல்வராஜ் (47) என்பவர் டிரைவராகவும் பணியில் இருந்துள்ளனர். பேருந்து வள்ளியூரை கடந்து வாகைகுளம் அருகே வரும் பொழுது நடத்துனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கிய அவர் சரிந்து […]

Continue reading …

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய திட்டம் அறிமுகம்!

Comments Off on பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய திட்டம் அறிமுகம்!

புதிதாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி எண் மற்றும் அதிவேக இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி இச்சலுகைத் திட்டத்தில், 6 மாதங்கள் வரை கட்டணத்தில் ரூ.200 தள்ளுபடி செய்யப்படும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு 6 மற்றும் 12 மாத சந்தா செலுத்தினால் வைபை ஆப்டிகல் மோடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் நிறுவுவதற்கான கட்டணம் ரூ.500 ரத்து செய்யபப்டும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பில் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் […]

Continue reading …

வைரஸ் நோய் பற்றி அமைச்சர் தகவல்!

Comments Off on வைரஸ் நோய் பற்றி அமைச்சர் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் பரவி வரும் ஒமிக்ரான் எக்ஸ்பிபி, பிஏ2 வகை வைரஸ்; பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒமிக்ரான் எக்ஸ்பிபி, பிஏ2 ஆகிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை […]

Continue reading …

முதலமைச்சரின் உகாதி வாழ்த்து!

Comments Off on முதலமைச்சரின் உகாதி வாழ்த்து!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கொண்டாடக்கூடிய உகாதி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22.3.2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்கல் புத்தாண்டை வரவேற்கும் உள்ளது இல்லத்திலும், வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றேன்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன். தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட […]

Continue reading …

பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Comments Off on பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

இன்று பாஜகவினர் நெல்லையில் “தாமரையை தமிழகத்தில் 40 – இடங்களிலும் மலரச் செய்வோம்,’’ என்று ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக பாஜக தலைமை கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தின் தலைவராக நியமித்தது. இதையடுத்து, பத்திரிக்கையாளர்களுடன் விவாதம், ஆளுங்கட்சியினருக்கு எதிரான ஊழல் குறித்துப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், உட்கட்சிக்குள் அவர் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வதாகக் கூறி நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்து கொண்டனர். கடந்த […]

Continue reading …

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரொனா!

Comments Off on ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரொனா!

இன்று ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமகன் ஈவேரா மறைவையொட்டி, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமமாக […]

Continue reading …

முதல் விதை நான் போட்டது; கமலஹாசன் கருத்து!

Comments Off on முதல் விதை நான் போட்டது; கமலஹாசன் கருத்து!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இல்லத்தரசிகளுக்கு பணம் கொடுப்போம் என்று அறிவிப்பை முதன் முதலில் வெளியிட்டது குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இத்திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு […]

Continue reading …

திருடிய காசில் நடிகைகளுடன் ஜல்சா செய்த திருடன்!

Comments Off on திருடிய காசில் நடிகைகளுடன் ஜல்சா செய்த திருடன்!

திருடன் ஒருவன் தான் திருடிய பணத்தை வைத்துக் கொண்டு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்கும் கடை நடத்தி வரும் சுந்தரின் கடையின் பூட்டு கடந்த 10ம் தேதி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 4.70 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் சிசிடிவி காட்சிகளை திரட்டி அதன் அடிப்படையில் […]

Continue reading …

வேலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Comments Off on வேலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. அதோடு மட்டுமல்லாமல் சூறை காற்றும் வீசியதால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கோடை காலத்தில் அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழையில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பாக சூறைக்காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் பிய்த்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. […]

Continue reading …