ஆவின் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக குற்றச்சாட்டு. மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர். அதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர். “கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது” என்று ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
Continue reading …மதுரை விஜய் ரசிகர்கள் மீது கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டு. உலக பட்டினி தினத்தையொட்டி, விஜய் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர். இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், ” அனுமதியின்றி கோயில் அன்னதான கூடத்திற்குள் புகுந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கட்சிக் கொடியை காட்டி பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக”, நடிகர் விஜய் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Continue reading …திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.14 லட்சம் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பக்தர்கள் கொண்டு வரும் கை பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்ய நவீன கம்ப்யூட்டருடன் கூடிய மெட்டல் டிடெக்டர் கருவி ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த கருவியை திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் குருசாமி துவக்கி வைத்தார்.
Continue reading …கிருஷ்ணகிரி அடுத்த பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து. மினி பேருந்தில் சென்னை அம்பத்தூரில் இருந்து சுற்றுலா ஒகேனக்கல் சுற்றுலா சென்ற 21 பேருக்கு படுகாயம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
Continue reading …மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 89.53 ஏக்கர் நிலம் தேவை. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, ” விமான நிலைய விரிவாக்க பகுதிக்கு தேவைப்படும், 86.20 ஏக்கர் பரப்பளவில் ஈச்சனோடை அருகே உள்ள இரு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட 89.53 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இதுவரை ஒப்படைக்க வில்லை ” என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் பதில் […]
Continue reading …*தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை* தமிழ்நாட்டில், 80 இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் உள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டர் கொள்கை மூலம் இவற்றை புதுப்பித்து, தமிழ்நாட்டு நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Continue reading …நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலிசார் சம்மன். மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலீசார் சம்மன். மேலும் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு துணைதலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.
Continue reading …லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆண்டிபட்டி வட்டாட்சியர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் வட்டாட்சியர் ஒரு லட்சம் லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Continue reading …மதுரை காமராஜ் பல்கலை, கார்மேகம் தலைமையில் கன்வீனர் கமிட்டி தேர்வு. மதுரை காமராஜ் பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் கமிட்டியை தேர்வு செய்ய உயர்கல்வி செயலர், கார்த்திக் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதன்படி, கமிட்டி ஒருங்கிணைப்பாளராக கார்மேகம், உறுப்பினர்களாக வாசுதேவன் (கவர்னர் பிரதிநிதி), தவமணி கிறிஸ்டோபர் (கல்வி பேரவை பிரதிநிதி), மயில்வாகனன் (பல்கலை பிரதிநிதி) ஆகியோர் கொண்ட ‘கன்வீனர் கமிட்டி’ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Continue reading …மதுரை சமூக சேவகிக்கு “அறம்” விருது வழங்கினார் நடிகர் பாக்யராஜ். மதுரை சமூக சேவகி வனிதா ரவி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஆதரவற்ற முதியவர்களுக்கு அரிசி, புத்தாடைகள், இனிப்பு போன்றவற்றை வழங்கி வருகிறார். மேலும் மதுரையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார். இவரது சேவையை பாராட்டி, நேற்று முன்தினம் நடைபெற்ற அறம் விருதுகள் 2024 நிகழ்ச்சியில், நடிகர் பாக்யராஜ் “சிறந்த சமூக சேவைக்கான அறம் விருது” வழங்கி கௌரவித்தார்.
Continue reading …