Home » Archives by category » தமிழகம் (Page 304)

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Comments Off on பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி அவரின் அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வைத்துள்ளன. விவசாயப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் […]

Continue reading …

இறுதி செமஸ்டர் தேர்வின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் – அமைச்சர் கே.பி.அன்பழகன்!

Comments Off on இறுதி செமஸ்டர் தேர்வின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் – அமைச்சர் கே.பி.அன்பழகன்!

இறுதி செமஸ்டர் தேர்வின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. இதனால் தேர்வுகளை விரைவில் நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தினதோறும் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை ஆன்லைனில் நடத்தலாமா என்பது பற்றி உயர்கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்கள் ஆகியோரின் பேசிய பின்பு இதை பற்றி அரசு அறிவிக்கும் என அமைச்சர் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,352 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,352 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் பலியாகியுள்ளனர், 6,045 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,15,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,137 பேர் பலியாகியுள்ளனர், 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,33,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 5,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

புகையிலை மற்றும் மதுவை ஒழிப்பதற்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

Comments Off on புகையிலை மற்றும் மதுவை ஒழிப்பதற்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

புகையிலை மற்றும் மதுவை ஒழிப்பதற்கு அனைவரும் உறுதியேற்க வேண்டும் என பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். இதனை குறித்து அவருடைய அறிக்கையில்; புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை: புகையிலை, மதுவை ஒழிக்க வேண்டும். சென்னையில் புற்றுநோய் தாக்கம் பற்றி தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விபரங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தில்லிக்கு அடுத்த படியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலையளிக்கிறது.இந்திய மருத்துவ […]

Continue reading …

#BREAKING: கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார்!

Comments Off on #BREAKING: கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார்!

கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலன் இன்றி உயிரிழந்தார். ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Continue reading …

முகக்கவசம் இன்றி கொரோனா வைரஸுடன் வாழ பழகிவிட்டேன் – அமைச்சர் செல்லூர் ராஜு!

Comments Off on முகக்கவசம் இன்றி கொரோனா வைரஸுடன் வாழ பழகிவிட்டேன் – அமைச்சர் செல்லூர் ராஜு!

மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் திருமலை நாயக்கர் மகாலை நடந்து வரும் வேலைகளை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு நடத்தினர். வட மாநில தொழிலாளர்கள் இல்லாததால் ஒப்பந்த தொழில்கள் முடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதை அடுத்து வட மாநில ஊழியர்கள் இல்லாததால் ஒப்பந்தம் செய்த வணிகங்கள் முடங்கிவிட்டது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு; அமைச்சர் நான் கொரோனா வைரஸோடு வாழ பழகிவிட்டேன். இதனால் கொரோனாவை காரணம் காட்டமல் வேலைகளை துவங்க வேண்டும் என […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5981 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5981 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் பலியாகியுள்ளனர், 5,870 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,03,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,948 பேர் பலியாகியுள்ளனர், 3,43,930 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,30,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

Comments Off on நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் இரங்கல் செய்தியில்; உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவர் […]

Continue reading …

இந்த வருடம் பொறியியல் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் கே.பி.அன்பழகன்!

Comments Off on இந்த வருடம் பொறியியல் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் கே.பி.அன்பழகன்!

இன்று சென்னை தரமணியில் பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்-னை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; செப்டம்பர் 10ஆம் தேதி சான்றிதழ் சரி பார்க்கும் பணிகள் முடிவடையும் எனவும் செப்டம்பர் 17ஆம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணத்தினால் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் அதிகரிக்கப்படாது என தெரிவித்தார். கட்டணம் செலுத்திவிட்டு அரியர் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர்பலியாகியுள்ளனர், 5,606 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,97,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,839 பேர் பலியாகியுள்ளனர், 3,38,060 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Continue reading …