இறுதி செமஸ்டர் தேர்வின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. இதனால் தேர்வுகளை விரைவில் நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தினதோறும் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை ஆன்லைனில் நடத்தலாமா என்பது பற்றி உயர்கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்கள் ஆகியோரின் பேசிய பின்பு இதை பற்றி அரசு அறிவிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.