Home » Archives by category » Uncategory » புதுச்சேரி (Page 3)

லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

Comments Off on லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் “லியோ” திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “லியோ.” இத்திரைப்படத்திற்கு மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளே அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி காட்சிக்குதான் அனுமதி வழங்கப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் “இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற மகிழ்ச்சியில் எல்லாரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டார்கள். விளையாட்டை விளையாட்டாக […]

Continue reading …

செந்நிறமாக மாறிய புதுவை கடல்!

Comments Off on செந்நிறமாக மாறிய புதுவை கடல்!

திடீரென புதுச்சேரி கடல் பகுதி செந்நிறமாக மாறியதால் புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரியில் முதலில் பார்க்குமிடம் அழகிய கடற்கரை தான். கடற்கரையின் நீல நிறம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆனால் இன்று காலை திடீரென புதுச்சேரி கடல் நீரின் நிறம் செந்நிறமாக மாறியது. காலை 10 மணி முதல் கடல் நீர் படிப்படியாக மாறத் தொடங்கியது. சுமார் 200 மீட்டர் வரை செந்நிறமாக மாறியதை அடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் […]

Continue reading …

பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

Comments Off on பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். […]

Continue reading …

தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி!

Comments Off on தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி!

கடந்த 2018ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். அப்போது அதே விமானத்தில் வந்த சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராகவும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராகவும் கோஷமிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்தது. தற்போது இவ்வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி விமானநிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய, […]

Continue reading …

இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி!

Comments Off on இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ராஜசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக விஜய மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை […]

Continue reading …

ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜனின் பேட்டி!

Comments Off on ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜனின் பேட்டி!

புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “எனக்கு மீனும் பிடிக்கும் மீம்ஸும் பிடிக்கும்” என பேட்டியளித்துள்ளார். தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் மீன் உணவை சைவமாக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “மீன் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் மீனில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை சைவ உணவிடம் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். மேற்குவங்கத்தில் […]

Continue reading …

முதல்வருக்கு பல கெட்டப்புகளில் பேனர்!

Comments Off on முதல்வருக்கு பல கெட்டப்புகளில் பேனர்!

பல்வேறு சினிமா கெட்டப்புகளில் புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பேனர் வைத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர்கள் புதுச்சேரியில் “பத்து தல” படத்தில் சிம்பு நடித்த ஏஜிஆர் முதல், புஷ்பா, சந்திரமுகி வேட்டையன் ராஜா வரை பல கெட்டப்புகளில் அவரது புகைப்படத்தை […]

Continue reading …

கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து உதயநிதி டுவிட்!

Comments Off on கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து உதயநிதி டுவிட்!

உதயநிதி “கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு […]

Continue reading …

தமிழக காவல் நிலையத்தை கிண்டல் செய்த கவர்னர்!

Comments Off on தமிழக காவல் நிலையத்தை கிண்டல் செய்த கவர்னர்!

புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகின்றன என கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறை கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவரை தப்பிக்க வைத்து விட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? 22 கிலோ கஞ்சாவை காவல் நிலைய காவல்துறையினர் […]

Continue reading …

புதுவை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on புதுவை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 9 சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கோடை விடுமுறை முடிந்து வெயில் கடுமையாக தொடர்ந்து இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடும் வெயிலால் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒதுவைக்கப்பட்டதால் அதனை ஈடு செய்ய ஜூன் 24ம் தேதியில் இருந்து அக்டோபர் 10ம் தேதி வரை 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …