இந்தியா-சீனா இடையே கால்வன் மோதலில் சீனா ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததற்கு ஆதாரமாக அவர்களின் கல்லறை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய – சீனா பாதுகாப்பு படையினர் இடையே உருவான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதை அடுத்து இந்த தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை இந்தியா வெளியிட்டது. ஆனால், சீனா உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை தெரிவிக்கவில்லை. இதில் 35க்கும் மேலான வீரர்கள் உயிரிழந்தனர் என இந்தியா தெரிவித்தது.
தற்போது தாக்குதலில் உயிழந்த சீனா வீரர்களை அடக்கம் செய்த 35 கல்லறைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.