இந்தியாவில் சாதனை செய்தவர்களின் பலரின் உருவத்தை பதித்த அஞ்சல் தலைகள் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது சென்னையிலுள்ள அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனின் உருவத்தை படித்த ஐந்து ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது.
ராமநாதன் ஏழை மக்களுக்காக மருத்துவ மையங்கள், மருத்துவ சேவைகள் ஆகிவற்றறை அமைத்து உதவி செய்து வருகிறார். தற்போது இவருடைய உருவத்தை பதித்த ரூபாய் 5 மதிப்பிலான அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தி உள்ளது.
இவருக்கு திரைத்துறையினர் ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ராமநாதன் கலைமாமணி பட்டம் பெற்று இருக்கிறார். கடந்த சில வருடங்களாக ஏழை மக்களுக்கு பல மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.