இந்தியா-சீனா எல்லை பிரச்னை பற்றி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேசிய கருத்துக்களை சீனா நாட்டின் சமூக வளையதளத்தில் இருந்து நீக்கியது.
சீனா நாட்டில் வெய்போ மற்றும் வி-சாட் போன்ற செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா-சீனா இடையே உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதநை அடுத்து இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியை எதிர்பார்க்கிறது. இதை விட்டுட்டு மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசிய இந்த கருக்களை அந்த செயலிகளில் இருந்து நீக்கி உள்ளது.
இதேபோல், சீனா தனது நடவடிக்கைகளை அதன் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியில் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும் என, வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்த கருத்தும் நீக்கப்பட்டதாக, சீனாவிற்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சீனாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.