முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் – சோகத்தில் வீரர்கள்!

Filed under: விளையாட்டு |

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் புகழ்பெற்ற வர்ணனையாளரான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

டீன் ஜோன்ஸ் 1984 முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 1984ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

டீன் ஜோன்ஸ் ஐபிஎல் 2020ஆம் ஆண்டு க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்று இருந்தார். மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கு இருந்த அவர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

https://twitter.com/IPL/status/1309084943759429632

இதை பற்றி ஐபில் குழு ட்விட்டர் பதிவிட்டது; டீன் ஜோன்ஸின் திடீர் மறைவு அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியும் சோகமும் அடைகிறோம். அவரது ஆற்றல் மற்றும் விளையாட்டு மீதான உற்சாகம் உண்மையிலேயே தவறவிடுவோம். துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுடன் எங்கள் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு பதிவிட்டுதுள்ளது.