தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கு அதிகமான உயிரிழந்துள்ளனர். அதிலும் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவிவருகிறது.
இந்த வைரஸால் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே எஸ் மஸ்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வந்துள்ளது.
இதற்கு முன்பே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஒருநாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர் டி அரசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.