பிரதமர் மோடி அறிவித்தபடி டால்பின் பாதுகாப்புத் திட்டம் 15 நாட்களில் தொடங்கப்படும் – பிரகாஷ் ஜவ்டேகர்!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடி அறிவித்தபடி டால்பின் டால்பின்களின் பாதுகாப்பிற்காக முழுமையான திட்டம் இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படும் என சுற்றுச்சூழல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம் அன்று பேசிய பிரதமர் மோடி, கடல் மற்றும் நதிகளில் வாழும் டால்பின்களை பாதுகாக்கப்படுவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்தார். இது சுற்றுலாவை வளர்க்கவும் உதவியாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தற்போது இதை பற்றி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ட்விட்டரில் பதிவிட்டது;
பிரதமர் மோடி சுகந்திர தினம் அன்று அறிவித்தபடி, ஆறுகள் மற்றும் நாட்டின் பெருங்கடல்களில் உள்ள டால்பின்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஒரு முழுமையான திட்டம் இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படும்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.