ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்மணி; பெருமையை பெற்ற சிவாங்கி!

Filed under: இந்தியா |

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் இந்தியா பெண்மணி என்ற பெருமையை சிவாங்கி சிங் பெற்றுள்ளார்.

இந்திய விமானப்படையில் வேலை பார்ப்பவர் லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங். தற்போது இந்தியா விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட ரஃபேல் விமானத்தை இயக்கும் முதல் இந்திய பெண்மணி இவர்தான்.

சிவாங்கி சிங் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு ஹரியானாவின் அம்பாலா விமானப்படையில் பணியைத் துவங்கினார். தற்போது இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்குவதற்கு 10 பெண் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்பே மிக்21எஸ் விமானத்தை ஓட்டி பயிற்சி பெற்ற சிவாங்கி சிங் தற்போது ரஃபேல் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.