தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது .
தற்போது, தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.